அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தயவு

Home » அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தயவு

அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தயவு

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது என்று 1 கொரிந்தியர் 13:4 சொல்லுகிறது. சாந்தமும் தயவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. சாந்தம் என்பது தனக்குச் செய்யும் தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுகிறது, தயவு அதன் மறுபக்கமாக இருக்கிறது. அது தனக்கு தீமை செய்தவர்களுக்கும் மேன்மையானவைகளைக் கொடுக்கிறது.

தேவன் நம்மீது வைத்திருக்கும் தயவானது நம்மை மனந்திரும்புதலுக்கு ஏதுவாக ஏவுகிறது என்று ரோமர் 2:4 சொல்லுகிறது. கர்த்தராகிய இயேசு சிலுவையில் தன்னை துன்பப்படுத்தியவர்களிடம் காட்டிய பொறுமையும், தயவும் சிலுவையில் அவரோடுகூட அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன் மனந்திரும்பக் காரணமாக அமைந்தது.

தயவானது எவ்விதம் வெளிப்படுமெனில், அது பிறருக்கு பிரயோஜனமானவைகளையே செய்யக் கூடியதாக இருக்கிறது (பிலிப்பியர் 2:4), அது சேவை செய்யக்கூடியதாக இருக்கிறது (லூக்கா 22:26), தயவு மிகவும் தாராளமுள்ளதாக இருக்கிறது (1 தீமோத்தேயு 6:17-19) இவை அனைத்தையும் கர்த்தராகிய இயேசுவில் நாம் காணமுடியும். தகுதியற்ற நம்மீது அவர் தயை காட்டினார் எனவே நம்மாலும் பிறரிடம் தயை காட்டமுடியும், நாம் அதற்குக் கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம்.

கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நாம் ருசிபார்த்ததுண்டானால் நம்மால் ஒழிக்க வேண்டிய சுபாவங்களை ஒழித்து, நாட வேண்டிய தெய்வீக சுபாவங்களை நாடமுடியும். மற்றவர்கள்மீது தேவையற்ற பாரத்தை சுமத்தாதிருக்கவும் முடியும். கர்த்தர்தாமே நம்மை அவரைப்போலவே தயவுள்ளவர்களாக மாற்றுவாராக! ஆமேன்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/CB8bBhBbCJ4

>