அன்பைக் கூட்டி வழங்குங்கள்: இறுமாப்பாயிராது – அறிவு

Home » அன்பைக் கூட்டி வழங்குங்கள்: இறுமாப்பாயிராது – அறிவு

அன்பைக் கூட்டி வழங்குங்கள்: இறுமாப்பாயிராது – அறிவு

எந்த ஒரு மனிதன் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறானோ அங்கே இறுமாப்பு உண்டாகிறது என்று 1 கொரிந்தியர் 4:6, ரோமர் 12:3, கலாத்தியர் 6:3 ஆகிய வசனங்கள் தெளிவாகப் போதிக்கின்றன. இறுமாப்பு எண்ணங்களில் தான் ஆரம்பிக்கிறது. எனவெ இறுமாப்பை மாற்ற நாம் எண்ணங்களோடு தான் இடைப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி நாம் தேவனை விட்டு நபர்களை முக்கியப்படுத்தும்போதும் அங்கே இறுமாப்பு தானாகவே உருவாகிவிடுகிறது. ஏனெனில் ஒருவரை உயர்த்த மற்றவரை மட்டுப்படுத்தும் போது அங்கே கோஷ்டிப் பூசல் உண்டாகி இறுமாப்பு குடிகொண்டு விடுகிறது. மனிதர்களை கனப்படுத்துவதும், மெச்சிக்கொள்வதும் தவறல்ல, ஆனால் தேவன் அவர்கள் வாழ்க்கையில் செய்த காரியங்களை எண்ணி அவரை மகிமைப்படுத்துவதன் மூலம் அந்த நபர்களை நாம் கனப்படுத்த முடியும்.

அன்பு அறிவுள்ளது. அது சத்தியத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறது. தான் புரிந்த சத்தியத்தை அது அப்பியாசப்படுத்தவும், சக மனிதர்களுடன் எப்படி நடந்துகொள்வது என்பதையும் அது அறிந்திருக்கிறது. கிறிஸ்து அப்படிப்பட்ட அன்புடையவராக இருந்ததால் தான் எப்படி நல்ல சீஷனாக நடந்துகொள்வது என்பதை தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவி அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார்.

குறைகளை நமக்கு உணர்தினாலும் அவர் அன்பாக உணர்த்துவார். அன்பின் மூலமாகத்தான் சத்தியம் வெளிப்படும். அன்பின் மூலமாக மாத்திரமே சத்தியம் வெளிப்படக்கூடியதாக இருக்கிறது. அன்பும் சத்தியமும் சேர்ந்து செயல்படும் போது அங்கு இறுமாப்புக்கு இடமில்லை. தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆனால் அன்பாக இருக்கிறார். அறிவு மாத்திரம் இருந்து அன்பு இல்லாமல் போகுமானால் அந்த அறிவு இறுமாப்பை உண்டாக்கும். அன்பு அறிவும் சேர்ந்து இருந்தால் பக்திவிருத்தி உண்டாகும். அன்பு இருந்து அறிவு இல்லாவிட்டால் அது வெகுளித்தனம்.இறுமாப்பின் வேர் சுயம் ஆகும். சுயம் என்பது ஒரு கோலாக இருந்தால், தாழ்வு மனப்பான்மையும், சுயபெருமையும் அதன் இரு எதிரெதிர் முனைகள். தேவனை வைக்க வேண்டிய இடத்தில் நாம் சுயத்தை வைக்கக்கூடாது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/8tolFP-l8nY

>