தேவன் வனாந்தரத்தில் பயணப்பட்ட இஸ்ரவேல் மத்தியில் வாசம் பண்ண விரும்பினார். அதன் விளைவாக அங்கே ஆசரிப்புக்கூடாரம் உருவானது. அந்த ஆசரிப்புக் கூடாரத்தை மோசே தன்னுடைய இஷ்டப்படி கட்டவில்லை. தேவன் காட்டிய மாதிரியின்படியே கட்டினார். இன்றும் தேவன் நம் மத்தியில் வாசம் பண்ண விரும்புகிறார். அதையும் அவர் தம்முடைய முறைமையின்படியே செய்ய விரும்புகிறார். அந்த முறைமைகளை அறிந்து நாம் அதன்படி செய்யும்போது அவர் நம்மில் வாசம்பண்ணி நம்மை வழிநடத்துகிறவராக இருக்கிறார்.
நாம் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்பதே அவர் நமக்குக் காட்டும் மாதிரியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல நம்முடைய வாழ்வின் நாம் கிறிஸ்துவை மையப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவை மையப்படுத்துவதென்றால் அவரது வார்த்தையை மையப்படுத்துவதாகும். அவருடைய வார்த்தையே அவருடைய சித்தமாக இருக்கிறது.
நாம் கிறிஸ்துவை மையப்படுத்தும்போது நமது அவயவங்களை நாம் அவருக்குக் கொடுத்து பரிசுத்தமும் பிரியமுமான புத்தியுள்ள ஆராதனையை செய்கிறவர்களாக இருக்கிறோம். புத்தியுள்ள ஆராதனை செய்பவர்கள் உலக முறைமைகளைக் கற்றுக்கொண்டு உலகதுக்கு ஒத்த வேஷம் தரிக்க மாட்டார்கள். கிறிஸ்துவை மையப்படுத்தாதவர்கள் தனது சுயத்தையே மையப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தின் அதிபதியின் ஆவி அவர்களை கீழ்ப்படியாமைக்குள் நடத்தி அவர்களது வழிகளைக் கெடுத்துப்போடுகிறது.
சத்தியத்தைப் புரிந்துகொண்டால் நாம் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க வேண்டிய அவசியமில்லை. சத்தியம் நமது மனதைப் புதிதாக்குகிறது. அகற்ற வேண்டியவைகளை அகற்றி அமர்த்த வேண்டியவைகளை அமர்த்துகிறது. அதன் விளைவாக நமது வாழ்வும் மறுரூபமாகிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செசெய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/MNk-EROXvB0