அன்பைக் கூட்டி வழங்குங்கள்: நீடிய சாந்தம்

Home » அன்பைக் கூட்டி வழங்குங்கள்: நீடிய சாந்தம்

அன்பைக் கூட்டி வழங்குங்கள்: நீடிய சாந்தம்

கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்துக்கு அன்பே அடித்தளமாக இருந்தது. அவர் தாம் வல்லமையுள்ளவர் என்று காட்டிக் கொள்வதற்காக அற்புதங்களைச் செய்யவில்லை, தம்மை ஞானமுள்ளவர் என்று காட்டிக்கொள்வதற்காக போதகம் செய்யவில்லை. அவர் செய்த ஒவ்வொரு நன்மைகளுக்கும் மனதுருக்கமே அடித்தளமாக இருந்தது. ஆவிக்குரிய வரங்கள் தெய்வீகமான முறையில் செயல்படவேண்டுமானால் அங்கு அன்பே அடித்தளமாக இருக்க வேண்டும். அன்பு இருந்தால் கரம் வைத்தாலே வரம் செயல்படும்.

ஆதி அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசு நடந்த அதே பாதையில் நடந்து நமக்கு ஒரு நல்ல முன்னுதாரணத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். தாம் முன்பின் அறியாத ஒரு சபைக்காக அப்போஸ்தலனாகிய பவுல் இடைவிடாமல் ஜெபிக்குமளவுக்கு மனதுருக்கத்தினால் நிறைந்திருந்தார். (ரோமர் 1:9)

இந்த உலகத்தைப் பொறுத்தவரை பணமே முக்கியமானதாகக் கருதப்பட்டாலும் பரலோக ராஜ்ஜியத்தில் பணத்துக்கு அல்ல தெய்வீக குணங்களுக்கே மதிப்பு உள்ளது. அன்பினால் கிரியை செய்யும் விசுவாசம் என்று கலாத்தியர் 5:6 சொல்லுகிறது. அதாவது அன்பு இருந்தால்தான் விசுவாசமே கிரியை செய்யும்.

அன்பு நீடிய சாந்தமுள்ளது என்று 1 கொரிந்தியர் 13:4 சொல்லுகிறது. இதை ஆங்கிலத்தில் love practices patience என்பார்கள். ஒருவர் அன்பாயிருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாமென்றால் அவர் நீடிய பொறுமையுள்ளவராக இருந்தால் அன்பாயிருக்கிறார் என்று பொருளாகும். நீடிய சாந்தம் பழிவாங்கத் துடிக்காது. அது பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும். அந்த உறவு அடிக்கடி சீர்குலைந்தாலும் மறுபடியும் சீர்படுத்தும்வரை பொறுமையாக இருந்து அது காரியத்தை சாதிக்கும். இது தேவனுடைய குணமாகும். அதே அன்பை அவர் நமக்குள்ளும் ஊற்றியிருப்பதால் அவருடைய கிருபையால் அவரைப்போலவே நம்மாலும் நீடிய சாந்தத்தைக் கொண்டு அன்பை வெளிப்படுத்த முடியும்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/PQiBP11goyg

>