பலன் அளிக்கிறவர்: நீங்காத பிரசன்னம்

Home » பலன் அளிக்கிறவர்: நீங்காத பிரசன்னம்

பலன் அளிக்கிறவர்: நீங்காத பிரசன்னம்

தேவன் தமது சித்தத்தை செய்வதற்கு நமக்கு விருப்பத்தையும், வல்லமையையும் அருளுகிறவர் என்று பார்த்தோம். அதுமட்டும் அல்ல, அவர் தமது நீங்காத பிரசன்னத்தையும் நமக்கு அருளி, இம்மானுவேலாக நம்மோடு கூடவே இருந்து நாம் அவருடைய சித்தத்தை செய்துமுடிக்க நமக்கு உதவி செய்கிறவராக இருக்கிறார். “பெலங்கொண்டு திடமனதாயிரு..” என்று வெறுமனே ஆலோசனை மட்டும் வழங்குகிறவராக இராமல் பெலங்கொண்டு திடனமதாய் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்ததை செயல்படுத்த அவரே கூட இருந்து உதவுகிறவராகவும் இருக்கிறார்.

கர்த்தருடைய தூய ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுகிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவர் நம்மைவிட்டு ஒருபோதும் விலகுவதேயில்லை. பலநேரங்களில் நாம் நமது கவனத்தை அவர்மீதிருந்து விலக்கி, வேறு விஷயங்கள் மீது செலுத்துகிறபடியால் அவரது இருப்பை நாம் உணர முடியாமல் போய்விடுகிறது. நம்மில் பலரும் தவறுவது இந்த இடத்தில்தான். நமது எண்ணங்களுக்கு ஏற்றார் போலத்தான் நமது உணர்ச்சிகளும் இருக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நமது எண்ணத்தை பரிசுத்த ஆவியானவரை விட்டு பிரச்சனைகள் மீது திருப்பினால் நமது பிரச்சனைகள் தான் நமக்கு பூதாகரமாகத் தெரியும். நமது எண்ணத்தை கர்த்தர் மீது குவிக்கும் போது நாம் அவரது பிரசன்னத்தை உணர்வது மட்டும் அல்ல, அந்த பிரச்சனைகளை வெல்ல பெலனும் பெற்றுக்கொள்கிறோம்.

கர்த்தருடைய ஆவியானவர் நம்மோடு இருப்பது போலவே, நமக்கு அருளப்பட்ட தேவனுடைய வார்த்தையும் நம்மோடு கூடவே இருக்கிறது. அதைத்தான் பெந்தேகொஸ்தே நாளில் மேலறையில் காத்திருந்தவர்கள் மீது காணப்பட்ட அக்கினிமயமான நாவு உணர்த்துகிறது. வார்த்தையாகிய தேவன் நம்மோடு கூடவே இருந்து நமது வாழ்க்கையின் எதிர்மறையான சூழ்நிலைகளை மாற்றக்கூடியவராக இருக்கிறார். தேவன் அருளின வார்த்தை நம்முடைய இருதயத்திலும் வாயிலும் எவ்வளவு சமீபமாக இருக்கிறதோ அவ்வளவு சமீபமாக ஆண்டவரும் இருக்கிறார். ஆகவே நாம் கலங்கவேண்டியது இல்லை. நாம் தைரியமடைந்து எழும்பி காரியத்தை நடப்பிக்கலாம். வெற்றி நம்முடையதாக இருக்கிறது. ஆமேன்!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/N96EyC70GYg

>