நம்முடைய சத்துருவாகிய பிசாசானவன் பிரித்து ஆளுகை செய்கிறவன், ஆனால் நம்முடைய பிதாவாகிய தேவனோ நம்மை இணைத்து ஆசீர்வதித்து நம்மை ஒரு மாளிகையாகக் கட்டி எழுப்புகிறவர். (எபேசியர் 2:13-22) அந்த மாளிகைக்கு கர்த்தராகிய இயேசுவே மூலைக்கல்லும் தலைக்கல்லுமாக இருக்கிறார். (1 பேதுரு 2:4-6)
அவர் நம்மை எப்படி ஒரே ஆவிக்குரிய மாளிகையாக கட்டியெழுப்புகிறாரெனில், முதலில் அவருக்கு தூரமாக இருந்த நம்மை தமது பரிசுத்த இரத்தத்தினால் தமக்கு சமீபமாகக் கொண்டுவந்து, நமக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்று அறியப்பட்ட யூதருக்கும் இடையே இருந்த நடுச்சுவரைத் தகர்த்து நம்மையும் ஆபிரகாமின் பிள்ளைகளாக்கி, நமக்கு உறவும், உரிமையும் கொடுத்து நம்மை அவருடைய குடும்ப அங்கத்தினராக மாற்றிக்கொண்டார்.
நம்மை தம்முடைய ஆவிக்குரிய மாளிகையாகக் கட்டியெழுப்பும் திட்டத்தை தேவனால் எப்படி நிறைவேற்ற முடிகிறது?
முன்புபோல நாம் அந்நியரும் பரதேசிகளுமல்ல, இப்போது நாம் தேவனுடைய சொந்தப் பிள்ளைகளாக இருக்கிறோம். ஒருவேளை உபதேசங்களால் பிரிந்திருக்கலாம். ஆனால் நாம் எந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வாழ்க்கைப் பின்னனியைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர் நம் எல்லோர் மேலும் அதிகாரமும் ஆளுகையுமுள்ளவர். அவர் நம் எல்லோரோடும் கிரியை செய்யக்கூடியவர். நம் எல்லோருக்குள்ளும் கிரியை செய்யக்கூடியவர். ஆகவே நம்மிலும், நம்மூலமாகவும் அவரால் கிரியை செய்து தம்முடைய மகத்தான திட்டத்தை அவரால் செயல்படுத்த முடியும். அவருக்கே மகிமையுண்டாவதாக. ஆமேன்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/lh2h-HRpZUI