அன்பைக் கூட்டி வழங்குங்கள் – வினைச்சொல்

Home » அன்பைக் கூட்டி வழங்குங்கள் – வினைச்சொல்

அன்பைக் கூட்டி வழங்குங்கள் – வினைச்சொல்

அன்பு என்பது பெயர்ச்சொல் அல்ல, அது ஒரு வினைச்சொல் என்பார்கள். ஏனெனில் அது செயல்படக்கூடியது. அன்பை செயலின்மூலம்தான் விளங்கிக்கொள்ள முடியும். யோவான் 3:16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று தமது அன்பை நிரூபிக்கும்படி தேவன் செய்த செயலைக் காட்டுகிறது.

நாம் அவருக்கு சத்துருக்களாய் இருக்கையில் அவர் நமக்காக மரித்ததால் அவர் நம்மேல் வைத்த அன்பை நிரூபித்திருக்கிறார் என்பதை ரோமர் 5:8 பேசுகிறது. அவர் தமது அன்பை உறுதிப்படுத்தும்படி யாரும் செய்யாத, யாரும் செய்ய விரும்பாத காரியங்களைச் செய்தார்.அவர் தமது சீஷர்களின் கால்களைக் கழுவிய நிகழ்வை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

சிங்கத்தை சிங்கமென நிரூபிக்க அது சிங்கமாகவே இருந்தாலே போதும் என்பார்கள். அதுபோல அன்பே உருவான கர்த்தருடைய சீஷர்கள் என்று நாம் நம்மை நிரூபிக்க நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தாலே போதும்.”நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள். (யோவான் 13:35)

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என்று 1 யோவான் 3:17 கேட்கிறது. ஆம், பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிறவன் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூரவேண்டும். குற்ற உணர்வினாலோ, நிர்பந்தத்தினாலோ அல்ல தேவன் நம்மை நடத்துவதினால் நாம் பிறரிடத்தில் அன்புகூரவேண்டும். அந்த அன்பை நமது கிரியைகளில் காட்டவேண்டும்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/qFyhcaiqe1Q

>