நம்முடைய தேவன் ஒரு தேர்ந்த கட்டிடக்கலை வல்லுநரைப் போன்றவர், அவரே நமக்கான சரியான வாழ்க்கைத் திட்டத்தை வடிவமைக்கிறவராகவும், அதை அவரே கட்டிமுடிக்கிறவராகவும் இருக்கிறார். அவர் அந்த வடிவமைப்பை வாக்குத்தத்தங்களின் வடிவில் நமக்குத் தந்திருக்கிறார். அவரே அந்த வாக்குத்தத்தங்களை நமது வாழ்வில் நிறைவேற்றி முடிக்கிறவராகவும் இருக்கிறார்.
ஒரு கட்டிடக்கலை வல்லுநர் தான் வடிவமைக்கப்போகும் கட்டிடத்தை தனது முன்னறிவினால் முண்காணுவதுபோல, தேவனும் நமது வாழ்க்கையை தமது முன்னறிவினால் முன்கண்டபடியால் அதை அவர் நமக்கு முன்னறிவிக்கிறவராகவும் இருக்கிறார். எனவேதான் அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் என்று வேதம் சொல்லுகிறது.
ஒருவேளை நமது பெலவீங்களால் தவறுகளோ, பின்னடைவுகளோ ஏற்பட்டாலும் அதையும் அவர் சீர்செய்வதற்கு முன்னேற்பாட்டை செய்திருக்கிறார். அவர் பிரச்சனை வருவதற்கு முன்பாகவே பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் சர்வஞானி. எனவேதான் அவரை உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்று வெளிப்படுத்தல் 13:8 சொல்லுகிறது.
நம்முடைய தேவன் நமக்கு எது நல்லதோ, எது ஏற்றதோ, எது ஆரோக்கியமானதோ அதை நம்முடைய வாழ்வில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். எனவே அவரை முழுவதுமாக விசுவாசித்து அவர் வழிநடத்துதலின்படி அவரை பின்பற்றுவோமாக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/quirT0BKLUk