அன்பு தேவன் நேசிக்கிறவைகளை நேசித்து அவர் வெறுக்கிறவைகளை வெறுக்கிறபடியால் அயோக்கியமானவைகளை செய்யாது. அன்பற்ற தன்மையானது சுயத்தை மையப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அறிவு பெருகி அன்பு தணிகிறபடியால்தான் கடைசிநாட்களில் ஜனங்கள் பொல்லாத சுபாவமுடையவர்களாக இருப்பார்கள் என்று வேதம் முன்னுரைக்கிறது.
2 நாளாகமம் 26 ஆம் அதிகாரத்தில் உசியா ராஜாவைக் குறித்துப் பார்க்கிறோம். அவன் தனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிலும் அபிஷேகத்திலும் நிலைத்திராமல் தனக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிட்டபடியால் அவன் முடிவு பரிதாபகரமானதாக மாறியது. அன்பு தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாது. அதே நேரத்தில் அன்பு பொருத்தமானதைச் செய்யும்.
தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல சபை வாழ்விலும் வரம் பெற்றவர்கள் ஒரு இடத்தில் கூடியிருக்கும்போது அவர்களுக்கு மத்தியில் அன்பு இருக்குமானால் அந்த வரமானது பொருத்தமானதைச் செய்து தேவனை மகிமைப்படுத்தும். எனவே நாம் அன்பை மையமாகக் கொண்டு நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும், சபை வாழ்விலும் கர்த்தரில் நிலைத்திருக்க கர்த்தர்தாமே கிருபை செய்வாராக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/IAf-uLyUx4c