சுயநலத்துக்கு மாத்திரம் ஒரு மருந்தைக் கண்டுபிடிப்போமானால் நம்மால் ஏதேன் தோட்டத்தை மறுபடியும் உருவாக்க முடியும் என்று ஒருமுறை ஒருவர் சொன்னார். ஆம், மனிதனின் பிரதான பிரச்சனை சுயநலம் ஆகும். தற்பொழிவு என்பது சுயநலத்தின் ஒரு அங்கமாகும். அதற்கு முற்றிலும் எதிரான அன்பானது எப்பொழுதும் தேவனையே முக்கியப்படுத்துகிறது. நாம் அன்புள்ளவர்களாய் சுயவிருப்பத்தை முக்கியப்படுத்தாமல் தேவனை முக்கியப்படுத்தி, பிறருக்கு உதவி செய்யும்போது கர்த்தர் அருளும் நன்மைகள் நம்மை அபரிமிதமாக வந்தடைகிறது.
நாம் தற்பொழிவுக்கு எதிராக பேசவேண்டுமானால் அன்பைக் குறித்துதான் பேசவேண்டும். அன்பைக் குறித்து அன்பாகத்தான் பேசவேண்டும். கர்த்தராகிய இயேசு “பாவியே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று சொல்லாமல் “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று கனிவோடும், கண்ணியத்தோடும் சொன்னதை நினைவுகூருறுங்கள்.
தற்பொழிவு எனக்கு வேண்டும், இப்பொழுதே வேண்டும் என்று நிற்கும். ஆனால் அன்பானது தேவனை நம்பி, அவர் என்னை நேசிக்கிறபடியால் எனக்கு எது நல்லது என்று அறிந்து, அதை எப்போது தரவேண்டுமோ அப்பொழுது தருவார் என்று அவருக்காகக் காத்திருக்கிறது. அன்பு இருக்குமிடத்தில் அமைதியும் பொறுமையும் விசுவாசமும் இருக்கும்.
அது மட்டுமல்ல, அன்பு கொடுக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அதற்கு எதிரான தற்பொழிவு தனக்கு வேண்டும் என்று தன்னை முக்கியப்படுத்துகிறது. கர்த்தராகிய இயேசுவே “அன்பின் விளைவாக கொடுத்தல்” என்ற பதத்துக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் தனது சரீரத்தையும் இரத்தத்தையுமே நமக்காகக் கொடுத்தார். அவன் செய்வதெல்லாவற்றையும் நம்மை முக்கியப்படுத்தியே செய்கிறார். அன்பின் உச்சக்கட்டமே தன்னைப் பிறருக்காகக் கொடுப்பதுதான். அந்தக் கொடுத்தலை நாம் கர்த்தராகிய இயேசுவில் காணலாம்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/fwm-hj4-xUw