தேவன் நம்முடைய வாழ்க்கையை சரிசெய்ய வேண்டுமானால் அவர் அதன் அஸ்திபாரத்தை முதலாவதாக சரிசெய்ய வேண்டும். ஏனெனில் நமது அஸ்திபாரத்திலேயே பிரச்சனை இருக்கிறது. அடிப்படையில் இருக்கும் பிரச்சனைகளை தேவன் சரிசெய்வதன் மூலம் நமது வாழ்க்கை நிரந்தரமாக மாறுகிறது.
வேதம் நம்முடைய பழைய நம்பிக்கைகள், பழைய பழக்க வழக்கங்கள், பழைய மனநிலை ஆகியவற்றை பலவீனமான அஸ்திபாரம் என்று அழைக்கிறது. அந்த நம்பிக்கைகள் நமது பாவத்தை ஜெயிக்கவோ, அல்லது நித்திய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவோ உதவாது. அவை பயத்தின்மீது கட்டப்பட்டதால் அது நம்மை அடிமைப்படுத்துவதாக இருக்கிறது. அவைகளுக்கும் கிறிஸ்துவுக்கும் துளியும் சம்பந்தமில்லை. இவைகளை வேதம் சுய இஷ்டமான ஆராதனைகள், வீண் ஆராதனைகள் என்று அழைக்கிறது.
ஆனால் கிறிஸ்துவோ நமக்காக தம்முடைய விலையேறப்பெற்ற, நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக்கொண்டிருக்கிறபடியால் நாம் புதிதும், ஜீவனுமான மார்க்கத்துக்குள் பிரவேசித்திருக்கிறோம். தேவன் தந்த இந்தக் கிருபையை பணமோ அல்லது வேறு எந்த உலகப்பொருளோ தரமுடியாது. அவர் நமது இரத்தத்தினாலே நம்மை கிரயமாகக் கொண்டு நம்மை குமாரராகவும், குமாரத்திகளாகவும் வைத்திருக்கிறார். இனி நாம் பழைய வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களல்ல, பயம் நம்மை ஆட்கொள்ள முடியாது. நான் அன்பினால் வாழ்கிறவர்கள், அன்பினால் தேவனை சேவிக்கிறவர்கள். கன்மலையாகிய கிறிஸ்து எனும் அஸ்திபாரத்தின் மீது நாம் கட்டப்பட்டிருக்கிறபடியால் இனி எதுவும் நம்மை அசைக்க முடியாது. ஆமேன்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Kn2PTs1cIks