தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது என்று 2 கொரி 1:20 கூறுகிறது. ஆமேன் என்றால் வர் உண்மையுள்ளவர், சத்தியமுள்ளவர், எல்லாவற்றையும் ஆளுகிறவர் என்று அர்த்தம். வாக்குத்தத்தங்கள் அவருக்குள் ஆம் என்று இருக்கிறபடியினால் அவர்மூலமாகத்தான் அது நிறைவேறக்கூடியதாகவும் இருக்கிறது.
வாக்குத்தத்தங்களை தேவன் நம்முடைய வாழ்வில் நிறைவேற்ற நம்முடைய ஒத்துழைப்பும் அவசியமாக இருக்கிறது. அவிசுவாசத்தின் விளைவாக மனிதன் அதை அடையாமல் போககூடும் என்று எபிரேயர் நிருபம் 4:1,2 வசனங்கள் நம்மை எச்சரிக்கிறது. வாக்குத்தத்தங்கள் நிறைவேற நாம் அவரோடு இணைந்து செயல்பட வேண்டும். அவர் கொடுக்க கைநீட்டுகிறார் அதுதான் கிருபை, நாம் பெற்றுக்கொள்ள கைநீட்ட வேண்டும், அதுதான் விசுவாசம். நாம் உறவின் அடிப்படையில் வாக்குத்தத்தங்களை விசுவாசத்தினால் உரிமையாக்கிக்கொள்ளும்பொழுது அவை ந்மக்கு நிறைவேறுகிறது.
தேவன் ஆமேன் என்று சொன்னால் “அப்படித்தான்” என்று அர்த்தம், நாம் ஆமேன் என்று சொன்னால் “அப்படியே ஆகக்கடவது” என்று அர்த்தம். விசுவாசமானது அறிவுள்ளது எனவே விசுவாசிக்கிறவர்கள் தங்கள் வாயைத் திறந்து தேவனுடைய வார்த்தைக்கு “ஆமேன்” என்று சொல்லுகிறார்கள். வேதவார்த்தையானது அழியாத வித்தாக இருக்கிறபடியால் அது தன் விளைச்சலைக் கொடுக்காமல் போகாது.
எனவே அவருடைய வாய், அவருடைய விருப்பம், அவருடைய வசனம் வாய்க்கும்.. ஆமேன்! அல்லேலூயா!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/LIqQQZksNYQ