திட அஸ்திபாரம்

Home » திட அஸ்திபாரம்

திட அஸ்திபாரம்

நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் 1 தீமோத்தேயு 1:12 ஆம் வசனத்தில் கூறுகிறார். அறிதலுக்கும் நிச்சயித்திருப்பதற்கும் இடையில் அனுபவம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அது மலையுச்சியின் அனுபவமாகவோ அல்லது பள்ளத்தாக்கின் அனுபவமாகவோ இருக்கலாம். ஆனால் அந்த அனுபவம்தான் நமக்கு விசுவாசத்தின் நிச்சயத்தைத் தருகிறது.

தேவனை அறிவதற்கு நமது சொந்தத் தகுதிகள் எதுவும் உதவாது. சேரக்கூடாத ஒளியில் வாசமாய் இருக்கிறவர் தாமாக தம்மை நமக்கு வெளிப்படுத்தினாலொழிய நம்மால் அவரை அறிந்துகொள்ள முடியாது. அப்போஸ்தனலாகிய பவுல் தேவனை அறிகிற அந்த அறிவின் மேன்மைக்காக சகலத்தையும் நஷ்டமும் குப்பையுமாக கருதுவதாகக் குறிப்பிடுகிறார். அந்த மேன்மை நமக்கு கிருபையாகத்தான் கிடைக்கிறது. அந்த மேன்மையை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் அதற்குக் கீழ்ப்படிய முடியும்.

கீழ்ப்படிதலுக்கும் அறிந்துகொள்ளுதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாம் அவருடைய வார்த்தைகளைப் பெற்று, அவைகளுக்கு கீழ்ப்படிந்து அன்புகூருகிறோம். கர்த்தரோ நம்மில் அன்புகூர்ந்து, தம்முடைய வார்த்தைகளை நமக்கு வெளிப்படுத்துகிறார். நாம் நமக்கு தெரிந்த விஷயங்களில் கீழ்ப்படிகிறோம், தேவன் நாம் தெரியாதவைகளை நமக்கு வெளிப்படுத்துகிறார். நமக்குத் தெரிந்த வார்த்தையின் அளவுதான், அதாவது நாம் பெற்ற வெளிப்பாட்டின் அளவுதான் நான் பெற்று அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதத்தின் அளவை நிர்ணயிக்கிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/VXKMZ0lCvaU

>