அன்பைக் கூட்டி வழங்குங்கள் – சகலத்தையும் தாங்கும்

Home » அன்பைக் கூட்டி வழங்குங்கள் – சகலத்தையும் தாங்கும்

அன்பைக் கூட்டி வழங்குங்கள் – சகலத்தையும் தாங்கும்

அன்பு சகலத்தையும் தாங்கும் என்று 1 கொரிந்தியர் 13:7 கூறுகிறது. அதாவது அன்பானது சீக்கிரமாக ஒருவனை கைவிட்டு கடந்து செல்லாது. மனந்திருந்திய மைந்தன் உவமையில் வரும் தந்தை அதற்கு ஒரு நல்ல உதாரணம். நம் கர்த்தராகிய தேவனும் அப்படியே எப்பிராயீமே நான் உன்னை எப்படி கைவிடுவேன்? (ஓசியா 11:8) என்று கூறுவதை நாம் வேதத்தில் வாசிக்க முடியும்.

தேவனுடைய அன்பானது மீட்பின் அன்பாகும். அது பாதுகாக்கிறது, உதவி செய்கிறது, திரளான பாவங்களை மூடி நிவர்த்தி செய்கிறது. நம்மீது பொறுமையாக இருந்து குறைவை அகற்றி நிறைவுக்கு நேராக நம்மை நடத்துகிறது.

தாவீது தேவனுக்கு விரோதமாக பத்சேபாள் விஷயத்தில் பாவம் செய்தபோதும் தேவன் ஏற்ற சமயத்தில் தீர்க்கதரிசியை அனுப்பி தாவீதின் தவறை சரிசெய்ததை நாம் பார்க்கிறோம். அதுபோலவே தேவன் நம்மை சரிபடுத்த மற்ற மனிதர்களைப் பயன்படுத்துகிறார், மற்ற மனிதர்களைத் தாங்க நம்மைப் பயன்படுத்துகிறார். ஒருவருக்கொருவர் தாங்கும் அன்புதான் மனிதர்களை நிற்க வைக்கிறது. தேவன் மனிதர்களைப் பயன்படுத்தித்தான் இந்த அருமையான மீட்பின் காரியத்தை செய்கிறார்.

பல நேரங்களில் தேவனுடைய அன்பு நம்முடைய பிரயோஜனத்துக்காக நம்மை சிட்சிக்கவும் செய்யும். சிட்சித்தல் என்பதன் பொருள் ஒழுங்குப்படுத்துதல் என்பதாகும். அதுவும் தேவ அன்பின் வெளிப்பாடே! நம்மை விடுவித்து, சீர்படுத்தி, மேன்மைப்படுத்தும்படி நம்முடைய பாவங்களை தன்மேல் ஏற்றுக்கொண்டு சுமந்த அந்த அன்பை விளங்கிக்கொண்டு, “உம்முடைய குரலைக் கேட்ட மாத்திரத்தில் கீழ்ப்படிய கிருபை தாரும்” என்று ஜெபிப்போமாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/9m1IxFuvlds

>