அன்பைக் கூட்டி வழங்குங்கள்: சகலத்தையும் நம்பும்

Home » அன்பைக் கூட்டி வழங்குங்கள்: சகலத்தையும் நம்பும்

அன்பைக் கூட்டி வழங்குங்கள்: சகலத்தையும் நம்பும்

விசுவாசம் நிகழ்காலத்தையும், நம்பிக்கை எதிர்காலத்தையும் முக்கியப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அன்போ காலத்துக்கு அப்பாற்பட்டது. இந்த அன்புதான் விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும் அடிப்படையாக இருக்கிறது. வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் எனக்குள் இருக்கிறார் என்ற உறுதியே நம்பிக்கையின் நங்கூரமாக இருக்கிறது.

நம்பிக்கை என்பது கர்த்தருடைய வார்த்தையைச் சார்ந்ததாக இருக்கிறபடியால் அது குருட்டாட்டமானதோ அல்லது இயல்புக்கு மாறானதோ அல்ல. கர்த்தர் மாறாதவராகவும், சொன்னதைச் செய்ய வல்லவராகவும் இருக்கிறபடியால் நிச்ச்யமாகவே முடிவு உண்டு நம் நம்பிக்கை வீண்போகாது.

நமக்கு பிரச்சனைகள் இருக்கிறது, நம்பிக்கையும் இருக்கிறது. நாம் எதை மனதில் வைக்கிறோமோ அதைப்பொறுத்துத்தான் நம்பிக்கை வரும். ஆகவே நாம் எதை மனதில் வைக்கிறோம் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. எதிர்மறையான காலங்களில் கர்த்தருடைய இரக்கத்தையும், கிருபையையும் மனதில் வைக்கும்போது நம்பிக்கை நமக்குள் ஊற்றெடுக்கிறது.

நம்பிக்கையும் நன்மையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டது. நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நன்மை வரும். கர்த்தர் நம் வெளிச்சமாக இருக்கிறபடியால் நாம் விழுந்தாலும் எழுந்திருப்போம். ஏனெனில் நமது நம்பிக்கை அவரையே மையமாகக் கொண்டிருக்கிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/z76OYv4a9Ms

>