உறவு…தெய்வீக திட்டம்

Home » உறவு…தெய்வீக திட்டம்

உறவு…தெய்வீக திட்டம்

நாம் கர்த்தரை அறிந்துகொள்வதற்கும், அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர் வைத்திருக்கும் திறவுகோல் நமக்கு அவரோடு இருக்கும் உறவு ஆகும். தேவன் நம்மைக் குறித்த சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறார். அதுபோலவே பிசாசும் நம்மைக் குறித்த மோசமான திட்டம் ஒன்றை வைத்திருக்கிறான். அவன் திருடவும், கொல்லவும், அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான்.

நம்மைக்குறித்த பிசாசின் திட்டம் எப்பொழுதும் அவனுடைய ஆதாயத்துக்கேற்றதாகவே இருக்கும். கூடுமானமட்டும் நம்மைப் பயன்படுத்திவிட்டு நம்மைத் தூக்கி எறிவதே அவனுடைய குணம். ஆனால் கர்த்தரோ நம்மை கடைசிவரை ஏந்தி, தாங்கி வழிநடத்துகிறவராக இருக்கிறார்.

நம்மைக்குறித்து நமக்கே திட்டங்கள் இருக்கலாம், ஆனால் அவையும்கூட பெருமைக்கும், சிற்றின்பங்களுக்கும் ஏற்றவைகளாக சுயத்தை மையமாகக் கொண்டவைகளாக மட்டுமே இருக்குமே தவிர அவற்றால் பயன் எதுவும் இல்லை. இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் தனக்காக எல்லா வசதி வாய்ப்புகளையும் சவதரித்துக்கொண்டு, அவற்றை அனுபவித்துவிட்டு கடைசியில் தேவனுடைய வழிநடத்துதல் இல்லாமல் செய்யும் எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாய் இருப்பதாக பிரசங்கி புத்தகத்தில் எழுதுகிறார்.

நமக்காக தேவன் வைத்திருக்கும் திட்டங்கள் மட்டுமே சிறந்தவை. நாம் என்ன செய்யவேண்டுமென்பதை அவர் அறிந்திருக்கிறபடியால் அதை அவர் மட்டுமே நமக்கு வெளிப்படுத்த முடியும். பிறப்பித்தவரை அறியாமல் பிறந்த நோக்கம் நமக்குப் புரியாது. தேவ நோக்கம் அறிந்து தேவசித்தம் செய்கிறவனே என்றென்றும் நிலைத்திருப்பான்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/QrNqXBrxnmI

>