தெய்வீகப்பார்வை..தெய்வீகப் பொறுமை: மாதிரியைப் பின்வைத்துப் போனார்

Home » தெய்வீகப்பார்வை..தெய்வீகப் பொறுமை: மாதிரியைப் பின்வைத்துப் போனார்

தெய்வீகப்பார்வை..தெய்வீகப் பொறுமை: மாதிரியைப் பின்வைத்துப் போனார்

கர்த்தரிடத்தில் அழைப்பு பெற்ற நமக்கு ஆசீர்வாதம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அழைப்பு இருக்கும்போது சவால்களும், அழுத்தங்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படிக் கையாள்வது என்பதற்கு கர்த்தராகிய இயேசு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு தாமாக சுயமாய் ஒன்றும் செய்யாமல் பிதாவின் சித்தத்தை மட்டுமே செய்ததால் அவருடைய தீர்மானங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அதைப்போலவே நாமும்கூட நம்மைப் பிறப்பித்தவரை முக்கியப்படுத்தி, நம்மை மறுபடியும் பிறப்பித்தவரை மையப்படுத்தி கிரியைகள் செய்யும்போது நமது தீர்மானங்களும் சரியாகவே அமையும்.

ஜனங்களுக்கு நம்மைக்குறித்த வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும். எல்லோரும் நம்மை சரியாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆனால் தேவனோ தாயின் கர்ப்பத்தில் உண்டாகுமுன்னே நம்மை அங்கீகரித்திருக்கிறார். நம்மை அங்கீகரிக்காதவர்களை எப்படி கையாளவேண்டும் என்று தேவனே நமக்கு ஞானத்தைத் தருவார். நான் என் ஆடுகளுக்கு முன்னே செல்கிறேன் என்று சொன்ன நம் நல்ல மேய்ப்பர் நாம் அவரைப் பின்பற்றும்படி நமக்கு தமது அடிச்சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவர் சகலத்தையும் அதனதன் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். அவர் நமக்கான ஆசீர்வாதங்களை அதற்கான நேரத்தில் நிச்சயம் தந்தருள்வார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Tw6rHhXagNk

>