உறவு: ஜெபம்

Home » உறவு: ஜெபம்

உறவு: ஜெபம்

நீர் யார்? நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்ற இரண்டும் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்வில் கேட்க வேண்டிய இரண்டு முக்கியமான கேள்விகள். அவர் யாரென்று நமக்கு விளங்கும்போது நாம் என்ன செய்யவேண்டும் என்ற புரிதலும் நமக்கு ஏற்படும். நாம் செய்யும்படி நியமிக்கப்பட்டவைகள் அவரால் நமக்கு அறிவிக்கப்படும். அவர் நம்மேல் தம் கண்ணை வைத்து நமக்கு ஆலோசனை சொல்லுகிற கர்த்தர்!

அவரை அறிந்துகொள்வதற்காகவே அவர் நம்மைத் தெரிந்து கொண்டிருக்கிறார். அவரை அறிந்துகொள்வதை அனுபவமாக்கிக் கொள்வதற்கு அவரே நமக்கு உதவி செய்யக்கூடியவராகவும் இருக்கிறார். நாம் அவரிடம் ஜெபிக்கும் போது அவருடைய சித்தம் நமக்கு வெளிப்படுத்தப் படுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் மீது வைத்த பயபக்தியின் விளைவாக, அன்பின் விளைவாக, பிதாவின் சித்தத்துக்கு அடிபணிந்ததன் விளைவாக அவருடைய ஜெபங்கள் கேட்கப்பட்டது என்று எபிரேயர் 5:7 கூறுகிறது. நாமும் அவ்வாறே நம்மை அவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் நாம் ஜெபத்தில் நடிக்கவோ, வீண் வார்த்தைகளை அலப்பவோ அல்லது தேவனை வளைக்கும்படி சூழ்ச்சி செய்யவோ வேண்டிய அவசியமில்லை. நம்முடைய பிதாவுக்கும் நமக்கு உறவு இருக்கிறபடியால் நமது தேவைகளை அவர் அறிந்திருக்கிறார். நமக்கு எது அவசியமோ அதை அவர் நமக்கு நிச்சயம் கொடுக்கிறார். நம்முடைய மனுஷீக விருப்பங்களல்ல, அவருடைய நல்விருப்பம் நம்முடைய வாழ்வில் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/U0sgajKlS6o

>