மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று 2 கொரிந்தியர் 4:17ல் வாசிக்கிறோம். நாம் படும் உபத்திரவமும் நாம் கடந்து செல்லும் பாதையும் நம்முடைய கண்களுக்கு பெரியவைகளாகத் தோன்றலாம். ஆனால் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கிப்பாப்போமானால் அந்த உபத்திரவங்கள் இலேசானவைகளாக நம் பார்வைக்கு மாறிவிடும்.
நம்முடைய கவனத்தை பிரச்சனையின் மீது அல்ல, தீர்வின் மீது வைக்கும்போது அது நமக்கு வெகுசீக்கிரத்தில் கடந்துபோகப்போகிற இலேசான உபத்திரவமாகத் தோன்றும். அந்தத் தீர்வைத் தருகிறவர் நம்முடன் கூடவே இருக்கிறார். அவர் எல்லையற்ற வல்லமையுடையவராக இருக்கிறார். எனவே எந்த உபத்திரவமும் அவர் நம்மோடு இருக்கும்போது இலேசான உபத்திரவமே!
இங்கே நாம் எதன்மீது அல்லது யார்மீது நம்முடைய கவனத்தைக் குவித்திருக்கிறோம் என்பது மாத்திரமே முக்கியம். நாம் அழிவுள்ளதில் அல்ல, நிரந்தரமானதில் கவனத்தைக் குவிக்க வேண்டும், நிகழ்காலத்தில் அல்ல எதிர்கால மகிமையின்மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். மொத்தத்தின் நமது கவனத்தை கர்த்தர் மீது குவிக்கையில் நம்முடைய பிரச்சனைகள் எதுவானாலும் அது எளிதில் கடந்து செல்லும் இலேசான உபத்திரவமாகவே காட்சியளிக்கும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/HF54ZCbWDEg