தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – விருப்பம், பகுத்தறிவு

Home » தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – விருப்பம், பகுத்தறிவு

தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – விருப்பம், பகுத்தறிவு

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் என்று பிலிப்பியர் 4:4ல் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். இந்த உலகம் சிற்றின்பங்களை நாடித் தேடுகிறது. ஆனால் தேவனே நமது இன்பமாக மாறிப்போவதுதான் தெய்வீகமான பேரின்பமாக இருக்கிறது. அவருடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும் அவரது வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு என்று சங்கீதம் 16:11 கூறுகிறது.

பாவமும் சந்தோஷத்தைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அது சிற்றின்பம். அதன் பின்விளைவு மிகவும் பயங்கரமானது. போருக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் போருக்குச் செல்லாமல் உப்பரிகையில் உலாவி சில நிமிடங்கள் சிற்றின்பத்தில் விழுந்தது தாவீதின் வாழ்க்கையில் மட்டுமல்ல முழு இஸ்ரவேலுக்கும் கடுமையான பின்விளைவுகளைக் கொண்டுவந்தது. எனவே தெய்வீக இன்பம், பாவத்தின் இன்பம் இவ்விரண்டுக்கும் இடையே நாம் சரியானதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பாவத்தின் இன்பம் சுயத்தை மையப்படுத்தி, அதையே முக்கியப்படுத்துகிறது. அதில் தேவனுக்கு இடமில்லை. ஆனால் ஆண்டவர் நம்மை முக்கியப்படுத்தி, தாம் மையமாக இருந்து நமக்கு நன்மைகளை அருளி நம்மை மகிழ்விக்கிறார். எனவே நாம் இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை பகுத்தறிந்து தேவன் தரும் இன்பங்களையே சார்ந்துகொள்ள வேண்டும். அதன் தொடக்கம் விரும்பத்தகாத விதமாக இருந்தாலும் பரவாயில்லை. மோசேயின் தெரிந்துகொள்ளுதல் அப்படிப்பட்ட ஞானமுள்ளதாக இருந்தது. அவன் எகிப்தின் சந்தோஷங்களைத் தெரிந்துகொள்ளாமல் தேவபிள்ளைகளோடு துன்பம் அனுபவிப்பதையே தெரிந்துகொண்டதால் அவன் வாழ்வு மிகுந்த மகிமையுள்ளதாக மாறியது.

சரியான தெரிந்துகொள்ளுதலை நாம் மேற்கொள்ள நமக்கு அதற்கான விருப்பமும், பகுத்தறிதலும் வேண்டும். அதற்கு ஆவியானவரின் அனுக்கிரகமும், ஒத்தாசையும் கண்டிப்பாக வேண்டும். அப்படி நல்ல ஒரு தெரிதலைச் செய்து கர்த்தரை மையப்படுத்தி, அவரையே முக்கியப்படுத்தி காத்திருப்போமானால் நாம் ஒருநாள் புதுபெலன் அடைந்து கழுகுகளைப்போல செட்டைகள் அடித்து எழும்பிப் பறப்பது நிச்சயம்!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/IBAG

>