உறவு: தெய்வீக உயர்வு

Home » உறவு: தெய்வீக உயர்வு

உறவு: தெய்வீக உயர்வு

பிசாசு கர்த்தராகிய இயேசுவை தேவாலயத்து உப்பரிகையில் நிறுத்தி அங்கிருந்து தாழக் குதிக்கும்படி சொல்ல, அவர் அவன் சொன்னபடி செய்யாமல் வசனத்தினால் அவனை மேற்கொண்டது நமக்குத் தெரியும். அவர் வசனத்தை அறிந்து புரிந்ததால் மட்டுமே அவனை அவரால் வசனத்தைக் கொண்டு மேற்கொள்ள முடிந்தது.

உலகம் முழுவதும் வேதாகமம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழலில் அது ஒரு தனி நபருக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதில்தான் அதன் தனித்தன்மை இருக்கிறது. அதைத்தான் Specified application என்பார்கள். நமக்குப் புரியாததை நம்மால் செயல்படுத்த முடியாது. கர்த்தரே நமக்கு அதைப் புரிய வைக்கிறவராக இருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் வசனத்தை தேடி வாசிக்க வேண்டியது மட்டுமே!

கர்த்தரோடு உறவும் உரையாடலும் இருந்தால்தான் நம்மால் வேதத்தை சரியாகப் புரிந்துகொண்டு அதை அப்பியாசப் படுத்த முடியும். அவர் பேசும்பொழுது அவர் குரலைக் கேட்டு செயல்பட முடியும். அப்பொழுதுதான் விசுவாசத்துடன் கூடிய கிரியை நம்மில் வெளிப்பட்டு அற்புதங்களைக் கொண்டுவரும். நம்மில் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும் அவரே! எனவே சீக்கிரத்தில் குறுக்கு வழியில் உயர்வை அடைய வேண்டும் என்று அவசரப்பட்டு தவறான செயல்களில் இறங்காமல் நம்மை உயர்த்துவேன் என்று சொன்ன அவரே நம்மை உயர்த்தும்வரை விசுவாசத்தோடும், பொறுமையோடும் காத்திருப்போமாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/tJeONmbrlqY

>