தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை..இனி வரும் பலன்

Home » தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை..இனி வரும் பலன்

தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை..இனி வரும் பலன்

இஸ்ரவேலின் அரசனாகிய சாலோமோன் சகல சம்பூரணங்களையும் அனுபவித்துவிட்டு, சூரியனுக்குக் கீழே பிரயாசத்துக்கு எந்த பலனும் இல்லை என்கிறான். ஆனால் தாசனாகிய மோசேயோ இனிவரும் பலன் ஒன்று உண்டு என்று கண்டறிந்து அதனைப் பின் தொடர்ந்தான். இந்த மனநிலையை தீர்மானிப்பது தேவனோடு கூட இருக்கும் உறவுதான். அந்த உறவுதான் அறிவைத் தருகிறது, அந்த அறிவுதான் ஆசீர்வாதத்தையும் பெருக்கத்தையும் நமக்குக் கொண்டுவருகிறது.

தேவனோடிருக்கிற உறவுதான் மற்ற எல்லாவற்றோடும் இருக்கிற உறவை நிர்ணயிக்கிறது. உறவுதான் இம்மைக்கும் மறுமைக்கும் சரியான கண்ணோட்டத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது. அந்த கண்ணோட்டம்தான் தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் என்கிற சரியான மனநிலையை நமக்குத் தருகிறது. ஆம், நம் தேவன் உடன்படிக்கையில் உண்மையுள்ளவர், அவர் நமக்குச் சொன்னதை நிறைவேற்றியே தீருவார்.

கடினமான பாதைகளின் ஊடாகப் போகும்பொழுது ஜீவ வசனமாகிய தேவனுடைய வார்த்தையை பிடித்துக்கொள்ளுவதினால் நமக்கு சரியான புரிதல் ஏற்படுகிறது. அவர் சர்வவல்லமையுள்ள தேவன் அவர் செய்ய நினைத்தது தடைப்படாது என்கிற தைரியத்தை அது தருகிறது. இங்கிருக்கும் பொக்கிஷங்கள் எதுவும் நிரந்தரமானவை அல்ல, இனிவரும் பலன் மட்டுமே என்றைக்கும் நிலைநிற்கக்கூடியது. ஆகவே மோசேயைப்போல நமது தீர்மானங்கள் இனிவரும் பலனைக் கருத்தில் கொண்டதாகவே இருப்பதாக! ஆமேன்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/DX0DpeSEspc

>