நம்மை நம்முடைய சக மனிதர்களே புரிந்துகொள்ளாதபோது, அவ்வளவு ஏன் நம்மை நாமே சரிவர புரிந்துகொள்ள முடியாதபோது நம்மை சிருஷ்ட்டித்த தேவன் மாத்திரமே நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்கிறார். மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல தொய்ந்து போன ஜனங்களைப் பார்த்து மனதுருகிய தேவன்தான் அவர். (மத்தேயு 9:36)
சில பிரச்சனைகள் ஏன் நமக்கு வந்தது என நாமே புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் வேளையில் அவர் நம்மையும், நமக்கு பிரச்சனை வந்த விதத்தையும் அறிந்தவராக இருக்கிறபடியால் நமக்கு சிறப்பாக ஆலோசனை சொல்ல வல்லவராகவும் இருக்கிறார்.
பல நேரங்களின் மன்னியாமை நமக்கு பல பிரச்சனைகளைத் தருகிறதாக இருக்கிறது. நாம் மன்னியாவிட்டால் சாத்தானால் மோசம்போக நேரிடும் என்று வேதமும் எச்சரிக்கிறது. கர்த்தர் நமக்குச் செய்யாததை நாம் செய்ய வேண்டும் என்று நம்மிடம் ஒருபோதும் சொல்வதில்லை. அவர் நம்மை கிருபையாக மன்னிதவராக இருக்கிறபடியால் நாமும் மற்றவர்களை மன்னிக்க நமக்கு பெலன் நல்குகிறவராக இருக்கிறார்.
அவர் நம்மோடு உணர்ச்சிப் பிணைப்புள்ள ஒரு தேவனாக இருக்கிறபடியால் நம்முடைய இயற்நிலையை அறிந்து நமக்காக பரிதபிக்கக்கூடியவராக இருக்கிறார். அதே நேரத்தில் நம் வாழ்வில் மாற்றம் கொண்டுவந்து நம்மை மகிழ்விக்க அவர் போதுமானவராகவும் இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/pB5InMp-izU