உங்களாலே மகிமைப்படுகிறார்: அவருடைய பலத்தின்படி பிரயாசம்

Home » உங்களாலே மகிமைப்படுகிறார்: அவருடைய பலத்தின்படி பிரயாசம்

உங்களாலே மகிமைப்படுகிறார்: அவருடைய பலத்தின்படி பிரயாசம்

நமக்கு எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் அதை மேற்கொள்வதற்கு வேதாகமத்தில் வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. ஆனால் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தின் நிமித்தம் வரும் துன்பங்களை மாத்திரம் ஏற்றுக்கொள்வதற்குத் தான் வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஏனெனில் அந்த சோதனையின் மத்தியில்தான் தேவன் நமக்கு போதனையை வைத்திருக்கிறார். அதன் மத்தியில் கற்றுக்கொள்வதுதான் நம் வாழ்க்கையை அற்புதமாக மாற்றக்கூடியதாக இருக்கிறது.

அந்த பாடுகளும், துன்பங்களும் ஆரம்பத்தில் தோல்விகள் போல தெரியலாம். ஆனால் அதன் மத்தியில் தனது சித்தத்தை நிறைவேற்றுவதுதான் தேவநோக்கமாக இருக்கிறது. அதை செய்துமுடிக்க அவரே நமக்கு பெலனைத் தருகிறார். நம்முடைய பாதங்களையெல்லாம் அவர் சாதகமாக மாற்றுகிறார், நம்முடைய பெலவீனங்களையெல்லாம் அவர் பெலனாக மாற்றுகிறார். அந்தப் பாடுகளின் மத்தியிலும் நமக்கு இளைப்பாறுதல் தருகிறவராக இருக்கிறார்.

ஏன் இப்படிப்பட்ட சூழல்கள் நமக்கு நேரிடுவதாக இருக்கிறது. இதன் மூலம் நமக்குள் ஒரு தெய்வீக சுபாவத்தை அவர் வளர்த்தெடுக்கிறார். நம்மை பிறருக்கு ஆசீர்வாதமாகப் பயன்படுத்துகிறார். நமக்கு அவர் வரங்களையும் கிருபைகளையும் கொடுத்ததே பிறருக்கு நாம் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே பாடுகளின் மத்தியிலும் நாம் சோர்ந்துபோகாமல் உறுதியாக நின்று தேவன் தரும் பெலனைப் பெற்றுக்கொண்டு அவர் நோக்கம் நிறைவேற பிரயாசப் படுவோமாக! அவரே நமக்கு பெலனும், பலனும் அளிக்கிறவர்!!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/VF-IXS1b6sY

>