மனிதனுடைய நினைவுகளின் தோற்றமெல்லாம் சிறுவயதுமுதல் பொல்லாங்கானதும், தீமையானதும், அநியாயமுள்ளதுமாக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. உலகம் நன்மையை தீமையென்றும், தீமையை நன்மையென்றும், இருளை வெளிச்சமென்றும் வெளிச்சத்தை இருளென்றும் சொல்கிறது. அநியாயத்தில் சந்தோஷப்படுத்துவதை நியாயப்படுத்துகிறது. விழுந்துபோன மனிதனுக்குள் இயல்பாக ஒட்டிக்கொண்டிருக்கும் பாவமே அதற்குக் காரணமாக இருக்கிறது.
எனவே விழுந்துபோன மனிதன் சத்தியம் தன்னை கட்டுப்படுத்துவதாக உணர்வதால் அதை வெறுக்கிறான். ஆனால் தேவனால் நீதிமானாக்கப்பட்ட மனிதனோ தேவன் விரும்புவதை தானும் விரும்புகிறான், தேவன் வெறுப்பதை தானும் வெறுக்கிறான். அவருக்கு எது பிரியமோ அதுவே தன் விருப்பம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறான்.
மனிதன் தேவ சாயலாக சிருஷ்ட்டிக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் பாவத்தின் விளைவாக ஒரு சீர்குலைவு வந்திருக்கிறது. அந்த சீர்குலைவு சிலுவையில் சரிபடுத்தப்பட்டு தெய்வீக சிறப்பு ஏற்படுகிறது. இதுவே தேவன் அருளும் இரட்சிப்பாக இருக்கிறது. ஆனால் பாவமோ துவக்கத்தில் இனிமையாகவும் முடிவில் நீங்காத சஞ்சலத்தைத் தருவதாகவும் இருக்கிறது. எனவேதாம் பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி என்று நீதிமொழிகள் 14:34 சொல்லுகிறது.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவனுக்குள் ஊற்றப்பட்ட தேவ அன்போ நான் எதற்காக சந்தோஷப்படவேண்டுமோ அதற்காக சந்தோஷப் படவும், எதற்காக சந்தோஷப்படக்கூடாதோ அதில் சந்தோஷமடையாதிருக்கவும் ஒரு ஆழமான தெய்வீகமான மனமாற்றத்தை நமக்குத் தருகிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/s87w8V73JUw