ஆசீர்வாதம் – அபிஷேகிக்கவே தரிசனமானீர்

Home » ஆசீர்வாதம் – அபிஷேகிக்கவே தரிசனமானீர்

ஆசீர்வாதம் – அபிஷேகிக்கவே தரிசனமானீர்

எந்த ஜனங்களால் நிராகரிக்கப்பட்டாரோ அதே ஜனங்களுக்குத்தான் தலைவனாகவும், மீட்பனாகவும் மோசே அனுப்பப்பட்டார். அவரது கடந்தகால கசப்பான நினைவுகள் அவருடைய அழைப்புக்கு தடையாக இருந்தது. தன்னால் அந்த அழைப்பை நிறைவேற்ற முடியாது என்று அவர் நினைத்தார். அப்படி நினைத்தால் மன அழுத்தமே மிஞ்சும். ஆனால் உண்மையில் அந்த தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. மற்றபடி அவருடைய வேலையை செய்வதற்கு தன்னைத்தான் தகுதிப் படுத்திக்கொள்ள எந்த மனிதனால் கூடும்?

மோசேக்கு கர்த்தர் முட்செடியில் தரிசனம் கொடுத்ததன் நோக்கம் அவரை மேலான தனது நோக்கத்துக்கென்றி நியமிக்க மட்டுமல்ல, அதை செய்துமுடிக்கும்படி அவரை அபிஷேகிக்கவும் தான். அதை செய்துமுடிக்கக் கூடிய பெலன், திறமை, மற்ற தேவையான அனைத்தையும் அவரே அருளுகிறவராக இருக்கிறார்.

நமக்கு ஏற்றதுபோல ஒரு வேலையை ஏற்படுத்தி, அதற்கு ஏற்றவிதத்தில் நம்மை உருவாக்குகிறார். அதாவது நமக்காக ஆயத்தம் பண்ணின ஆசீர்வாதங்களுக்காக, அவர் நம்மை ஆயத்தம் பண்ணுகிறார். அவருக்குக் கீழ்ப்படியும்பொழுது தேவநோக்கம் நம் வாழ்வில் நிறைவேறுகிறது. தம் மேலான நோக்கம் நிறைவேற அவரே நம்மைப் பாதுகாக்கிறார், பயிற்றுவிக்கிறார், பயன்படுத்தவும் செய்வார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/z84WK-J-O50

>