அஸ்திபாரம்: உறவு – அருள் வெளிப்பாடு

Home » அஸ்திபாரம்: உறவு – அருள் வெளிப்பாடு

அஸ்திபாரம்: உறவு – அருள் வெளிப்பாடு

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் என்று எபிரேயர் 1:1,2 வசனங்கள் கூறுகின்றன. இந்த கடைசி நாட்களில் பிதாவாகிய தேவன் நம்மை தமது வார்த்தையாகிய குமாரன் மூலமே வெளிப்படுத்துகிறார்.

இருள் நிறைந்த இந்த உலகில் ஒரே வெளிச்ச மூலமாக வார்த்தை மட்டுமே இருக்கிறது. ஆகவே அதன் மீதே நமது கவனம் குவிய வேண்டியதாக இருக்கிறது. எழுதப்பட்ட வார்த்தையாகிய லோகோஸை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அதன் ஊடாகப் பேசும் தேவவார்த்தையாகிய ரேமா நமக்குப் புரியும். வசனத்தின் ஊடாக, நமக்குப் புரியும் விதத்தில் பேசுவதில் தேவன் வல்லவர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் வேதம் வாசிக்கும்போது நமது செவிகளையும் திறந்து வைத்திருப்பது மட்டுமே!

தேவ சித்தத்தை நாம் அறிய விரும்பினால், நாம் தேவ சத்தம் கேட்க வேண்டும். தேவசத்தத்தை நாம் வார்த்தையிலிருந்துதான் பெற முடியும். உமது வாயின் வார்த்தைகளை ஆகாரத்தைப்போல உட்கொண்டேன் என்று பக்தனாகிய யோபு சொல்வதை கவனியுங்கள். வார்த்தையின் ஊடாக நம்மோடு பேசும் தேவன் நமது மனக்கண்களைத் திறந்து வேதத்தில் உள்ள அதிசயங்களைப் பார்க்கும்படிக்கும் நமக்கு கிருபை செய்வார்.

அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். (2 பேதுரு 1:19)

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/tSLVInL20WY

>