அஸ்திபாரம் உறுதியாக இருந்தால்தான் கட்டிடம் நிலைத்து நிற்கும், அதுபோல நம் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்றால் நமது அஸ்திபாரம் உறுதியாக போடப்பட்டிருக்க வேண்டும். கிறிஸ்துவால் மீட்கப்பட்டு, அவரை விசுவாசிக்கிற நமக்கு நல்ல அஸ்திபாரம் ஏற்கனவே போடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள கிருபை நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறது. நாம் கிறிஸ்துவுக்குள் யாரென்பதையும், நாம் விசுவாசிக்கிறாவர் இன்னார் என்பதையும் நாம் அவரது கிருபையால் அறிந்திருக்கிறோம்.
ஆனால் இவ்வுலகத்தில் அநேகர் தங்கள் அஸ்திபாரமாக தேவனைக் கொண்டிராமல் வேறே அஸ்திபாரங்களை வைத்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் தெய்வீகக் கண்ணோட்டமற்றவர்களாகவும், தேவனைத் தேடக் கூடாதபடிக்கு கர்வம் நிறைந்த இருதயம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். லூக்கா 12:16-21 வசனங்களில் கர்த்தராகிய இயேசு சொன்ன உவமையில் வரும் ஐசுவரியவான் அப்படிப் பட்டவனாக இருந்தான். அவன் தனது அஸ்திபாரமாக தேவனைக் கொண்டிராமல் ஐசுவரியத்தை நம்பிக்கொண்டு இருந்ததால் தன் ஜீவனை இழந்துப்போனான்.
தேவன் இருக்க வேண்டிய இடத்தில் வேறொன்றை வைப்பதுதான் தவறான அஸ்திபாரம் ஆகும். நாமோ வசனத்தைப் புரிந்துகொள்ள புரிந்துகொள்ள நமது அஸ்திபாரம் கன்மலையின் உச்சியில் போடப்பட்ட அஸ்திபாரம்போல உறுதியானதாக மாறுகிறது. அந்தப் புரிதல் நம்மை கிருபையை மட்டுமே சார்ந்துகொள்ளும்படி நம்மை ஏவுகிறது. கர்த்தருடைய தயவு மட்டுமே நம்மை உயர்த்த முடியும் என்பதையும், எந்த மனிதனையும் உயர்த்தவும் தாழ்த்தவும் அவரால் ஆகும் என்பதையும் உணர்த்துகிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/ObnmwuwYZVI