தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – பாடுகளுக்கு பங்காளி… உங்களாலே மகிமைப்படுகிறார் 3

Home » தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – பாடுகளுக்கு பங்காளி… உங்களாலே மகிமைப்படுகிறார் 3

தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – பாடுகளுக்கு பங்காளி… உங்களாலே மகிமைப்படுகிறார் 3

அழைப்பும் அனுபவமும்

தேவன் நம்மை அழைத்த அழைப்பு சீஷத்துவத்துக்கான அழைப்பாகும், அது நாம் அவருக்கு சேவை செய்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அழைப்பு. நாம் அவருக்கென்று கிரியை செய்யவே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில் அவர் தம்மில்தாமே மகிமையுள்ளவராக இருந்தும், நம்மில் மகிமைப்பட அவர் விரும்புகிறார்.

தேவனோடு இருக்கக்கூடிய உறவுதான் தேவநோக்கத்தோடு நம்மை இணைக்கக்கூடியதாக இருக்கிறது. தேவனுடைய வேலையைச் செய்ய தேவன் நமக்குக் கொடுக்கும் பெலனுக்குப் பெயர்தான் அபிஷேகம். ஆம், ஆவியானவர் நம்மோடு கூடவே இருந்து, நம்மை எதற்கென்று அழைத்தாரோ அந்த தேவநோக்கம் நிறைவேற நம்மைப் பழக்குவிக்கிறவராக இருக்கிறார்.

அதை எப்படி அவர் நடைமுறையில் நிறைவேற்றுகிறார்? நாம் அழைக்கப்பட்ட அழைப்புக்கு அழைப்புக்கு நம்மை பாத்திரவான்களாக உருவாக்கப்பட நாம் சோதிக்கப்படுவதும், போதிக்கப்படுவதும், பழக்குவிக்கப்படுவதும் அவசியம். எதிர்மறையான சூழல்களையும், பின்னடைவுகளையும் நமக்கு சாதகமாக்கி கர்த்ததால் நம்மை பழக்குவிக்க முடியும். எனவே பிரச்சனைகள் நேரிடும்போது இந்தச் சூழலில் நான் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்று அவரிடம் நாம் கேட்டு ஜெபிக்க வேண்டும். அவர் கற்றுக் கொடுக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

இவ்விதமாக கர்த்தருடைய ஆவியானவர் நம்மை உருக்கி, உருவாக்கி, நம்மைக் கொண்டு தம்முடைய மேலான நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம் தாம் மகிமைப்பட்டு, நம்மையும் மகிமைப்படுத்துகிற தேவனாக இருக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/QE07D5qynTo

>