அப்போஸ்தலர் நடபடிகள் 20:23,24 வசனங்களை வாசித்தோமானால் அப்போஸ்தலனாகிய பவுல் தனக்கு பட்டணங்கள் தோறும் கட்டுக்களும், உபத்திரவங்களும் காத்திருப்பதாகவும், ஆனாலும் அவற்றிற்காக பயப்படாமலும், பின்வாங்காமலும் இருந்து தேவ நோக்கத்தை சந்தோஷமாக நிறைவேற்ற தீர்மானித்திருப்பதாகவும் கூறுகிறார். இது எப்படி சாத்தியம்?
ஆசீர்வாதங்களை அனுபவிக்க நம் அனைவருக்கும் விருப்பம்தான். ஆனால் அந்த ஆசீர்வாதத்தை சென்றடையும் பாதையில் சவால்களும், துன்பங்களும் வருவது தவிர்க்க முடியாதது. இவை ஒரு விசுவாசி எப்படி அணுகுவது?
ஆசீர்வாதத்துக்கென்று நம்மை அழைத்த தேவன் அந்த அழைப்பை நிறைவேற்ற நமக்கு ஒரு விருப்பத்தைக் கொடுத்து, அதற்கான உபகரணங்களை நமக்குக் கொடுத்து, தேவையான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். அந்த அழைப்பின் நிமித்தம் பாடுகள் வரும்பொழுது அதே விருப்பத்தைக் கொண்டுதான் அந்தப் பாடுகளை மேற்கொள்ளவும் நமக்கு உதவி செய்கிறார்.
இதை அவர் வற்புறுத்தலின் பேரில் நம்மைச் செய்யச் சொல்வதில்லை. நமது செவிகளைத் திறந்து, நம்மை கவனிக்கப்பண்ணி, கற்றுக்கொடுத்து, நமது சுய விருப்பத்தின் பேரில் நாமே அந்தப் பாதையை ஜெயமாகக் கடக்க அவர் உதவி செய்கிறார். ஆசீர்வாதத்துக்கான பாதை துன்பங்களின் ஊடாக கடந்து செல்வதுதான் என்றால் அதை தைரியமாக கடக்கும்படியான விருப்பத்தையும், தீர்மானத்தையும் நாம் எடுக்க அவரே நமக்கு பெலன் தருகிறார். ஆகவே நாம் வெட்கமடைவதில்லை. நாம் அவரிலும், அவர் நம்மிலும் மகிமையடையும்படி அவரே இந்தப் பாதையை நமக்கு நிர்ணயித்திருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/5jUasf1SoM4