தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – விருப்பம், உறுதி

Home » தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – விருப்பம், உறுதி

தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – விருப்பம், உறுதி

கர்த்தருக்காக வாழ்வது என்பது ஒரு தீர்மானத்தில் ஆரம்பிக்கிறது. தீர்மானம் எடுத்தால் அதில் கடைசிவரை நிலைநிற்க உறுதி வேண்டும். மகிழ்ச்சியான சூழலாக இருந்தாலும் சரி, சவாலான சூழலாக இருந்தாலும் சரி எடுத்த தீர்மானத்தில் நிலை நிற்கவைப்பதும், உத்வேகத்தைத் தருவதும் அதற்கான விருப்பமே ஆகும். நாம் எடுக்கும் தீர்மானம் நாம் செல்லவிருக்கும் திசையை நிர்ணயிக்கிறது.

ஆசீர்வாதமான ஒன்றை எதிர்நோக்கி ஒரு தீர்மானம் செய்வது சரி, ஆனால் சவாலான பயணத்தை யார் விரும்புவார்கள்? ஆனால் அப்படிப்பட்ட பயணங்களையும் தெரிந்தெடுக்க விருப்பத்தைத் தந்து, நம்மை பெலப்படுத்துவது தேவ கிருபையே ஆகும். மோசே எகிப்தின் இன்பங்களைத் துறக்கவும், தேவ ஜனங்களோடு துன்பத்தை அனுபவிக்கவும் ஒரு தீர்மானத்தை எடுத்தார். அதில் கடைசிவரை நிலைத்திருக்கவும் செய்தார்.

விருப்பத்தோடு தீர்மானம் எடுப்பது ஒரு காரியம், எடுத்த தீர்மானத்தில் கடைசிவரை நிலைத்திருப்பது இன்னொரு காரியம். அப்படி நிலைத்திருந்தால்தான் தேவன் நம்மில் மகிமைப்படுவார், நாமும் அவரில் மகிமைப்படுவோம். அவருக்காக தீர்மானம் எடுக்க நமக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதே மிகப்பெரிய சிலாக்கியம், எடுத்த தீர்மானத்தில் கடைசி வரை நிலைக்க தீர்மானிக்க உதவி செய்தவரை சார்ந்துகொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. மோசே தேவனைச் சார்ந்துகொண்டு அவரது சாயலை கண்டவராக இருந்தபடியால்தான் அவரால் தீர்மானத்தில் கடைசிவரை நிலைத்திருந்து ஒரு பெரிய சரித்திரத்தை உருவாக்க தேவன் கையில் ஒரு கருவியாக அவரால் செயல்பட முடிந்தது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/dJ_Fl1_j3vE

>