உங்களாலே மகிமைப்படுகிறார் – நம்பிக்கையும் நடக்கையும்

Home » உங்களாலே மகிமைப்படுகிறார் – நம்பிக்கையும் நடக்கையும்

உங்களாலே மகிமைப்படுகிறார் – நம்பிக்கையும் நடக்கையும்

நம்முடைய விசுவாசம் கேள்வியில் ஆரம்பித்து செயல்களில் முடிகிறது. எனவே நம்முடைய நம்பிக்கையானது நமது தன்மையில் மாற்றத்தைக் கொண்டுவந்து நம்முடைய நடக்கையில் வெளிப்படுகிறது. எனவே நாம் எதை நம்புகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

தேவன் நமது சிந்தையில்தான் முதலாவதாக மாற்றம் கொண்டு வருகிறார். நாம் கிறிஸ்துவின் சிந்தை உடையவர்களாய் மாறும்பொழுது நம்முடைய நடக்கையில் மாற்றம் வருகிறது. ஏனெனில் கிறிஸ்துவின் சிந்தையே சரியான நம்பிக்கை. அந்த சரியான நம்பிக்கையில்லையென்றால் நம்முடைய நடக்கையில் நடிப்பு கலக்க வாய்ப்பிருக்கிறது.

நாம் மனிதர்களாக இருப்பதால் எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவது இயல்பானது, அதை நாம் தேவமனிதர்களாக இருந்துதான் ஜெயிக்க முடியும். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையானது நடக்கையில் மாற்றத்தைக் கொண்டுவர வல்லமையுள்ளதாகவும் போதுமானதாகவும் இருக்கிறது. நாம் வசனத்தை உள்வாங்கும்பொழுது நம் சிந்தையும் வசனரீதியாகவே மாறிவிடுகிறது.

எந்த எண்ணத்தையும் சிறைப்பிடித்து கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியப்பண்ணும்பொழுது நம் ஆத்துமா தன் இளைப்பாறுதலுக்குத் திரும்புகிறது. ஏனெனில் கர்த்தர் நமக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிலுவையில் நன்மை செய்திருக்கிறார். எனவே பாதாளத்தின் வாசல்கள் நம்மை மேற்கொள்ளமாட்டாது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/9qwEca_GIf4

>