உறவு: இரக்கங்களின் பிதா

Home » உறவு: இரக்கங்களின் பிதா

உறவு: இரக்கங்களின் பிதா

தன்னுடைய பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று நீதிமொழிகள் 28:13 சொல்லுகிறது. நாம் அறிக்கையிடுவதன் மூலம் நாம் பாவி என்பது உறுதிப்படுகிறது. அது நல்லதுதான், ஆனால் பரிகாரியை அறிக்கை செய்வதன் மூலம்தான் பாவம் பரிகரிக்கப்படுகிறது. நாம் செய்வதை அறிக்கை செய்வது மட்டுமல்ல, அவர் செய்ததையும் நாம் அறிக்கை செய்ய வேண்டும்.

நாம் பிரச்சனைகளை பேசிக்கொண்டே இருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை. பிரச்சனைகளை மாற்றக்கூடியவரைப் பற்றி பேசுவதாலேயே பிரச்சனை மாறுகிறது. அப்பொழுதுதான் அகற்றப்படவேண்டிய பாவம் அகற்றப்பட்டு ஆசிர்வாதம் வந்து சேருகிறது. மன்னிப்பும் விடுதலையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டது. நம்முடைய கடந்தகாலப் பாவங்களை கர்த்தர் இரக்கமாய் முற்றிலும் மன்னித்துவிட்டார் என்ற நிச்சயம் நமக்கு பெரிய விடுதலையைத் தருகிறது.

அவருடைய இரக்கம் நமது கடந்தகால கவலைகளை மாற்றுவது மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் நமக்கு உதவி செய்யக்கூடியதாக இருக்கிறது. அவர் நம்முடைய பெலவீனங்களை அறிந்திருக்கிறபடியால் அவர் நம் பட்சத்தில் இருந்து நமக்கு உதவிசெய்கிறவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்பதாலும் அவை காலைதோறும் புதிதாக இருப்பதாலும் (புலம்பல் 22,23) நமக்கு எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையும் உண்டு. நாம் அவருடைய இரக்கங்களை முற்றிலும் சார்ந்துகொள்வோமாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/FdDF4nWJAWs

>