உறவு – பயத்திலிருந்து விடுதலை

Home » உறவு – பயத்திலிருந்து விடுதலை

உறவு – பயத்திலிருந்து விடுதலை

பூமியில் எப்பொழுது பாவம் பிரவேசித்ததோ அப்பொழுதே பயமும் வந்துவிட்டது. எது நம்மை பயப்படுத்துகிறதோ அது நம்மை அடிமை கொள்ளுகிறது. பயங்களின் உச்சம் மரணபயமாகும். அது உடனடியாக மனிதனுக்கு திடீரென்று வந்துவிடுவதில்லை. பல்வேறு பயங்கள் ஒன்று சேர்ந்து முடிவில் மரணபயத்தைத் தோற்றுவிக்கின்றன.

மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரமென்று திரித்துவம் உடையவனாக இருக்கிறபடியால் மனதை பாதிக்கும் பயமானது உடலையும், அவன் ஆவியையும் பாதிக்கிறது. பல்வேறு வியாதிகள் பயத்தினால்தான் வருகின்றன. மனதில் ஏற்படும் கவலையினால் மனிதன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, சுயபரிதாபத்தினாலும், துக்கத்தினாலும் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறான்.

எனவேதான் பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் என்று எபிரேயர் 2:14,15 வசனங்கள் கூறுகின்றன.

உலகத்திலேயே தாய் தன் பிள்ளைக்குத் தரும் பாதுகாப்பும் பராமரிப்பும்தான் தலைசிறந்தது என நாம் அறிவோம். ஆனால் நம்மிலும் மேன்மையானவராகிய நம்முடைய கர்த்தர் நமக்குத் தரும் பாதுகாப்பானது நம்மை சகல பயங்களிலிருந்தும் விடுவிக்கப் போதுமானதாக இருக்கிறது. அவர் நம்முடைய பாடுகளையும் துக்கங்களையும் சுமந்துகொண்டு தமது தழும்புகளால் நமக்கு சுகம் தருகிறார். நாம் சுகமாயிருக்கும்படிக்கு மரணத்தை தன்மேல் ஏற்றுக்கொண்டார். ஆகவே நாம் பயத்தில் வாழவேண்டிய அவசியமில்லை.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/HZcTf7-JdyY

>