தெய்வீகப் பார்வை… தெய்வீகப் பொறுமை – உபத்திரவம் நித்திய கனமகிமை

Home » தெய்வீகப் பார்வை… தெய்வீகப் பொறுமை – உபத்திரவம் நித்திய கனமகிமை

தெய்வீகப் பார்வை… தெய்வீகப் பொறுமை – உபத்திரவம் நித்திய கனமகிமை

மேலும் காணப்படுகிறவைகளை அல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று 2 கொரிந்தியர் 4:17 கூறுகிறது. ஆம், இப்போது இருக்கும் பிரச்சனைகள் நம்மை அழிக்கப்போவது இல்லை, கர்த்தர் தமது கிருபையினால் இதை ஆசீர்வாதமாக மாற்றப்போகிறார்.

பிரச்சனைகள் கனமகிமையைக் கொண்டுவருவதில்லை, அந்தப் பிரச்சனைகளை எப்படி கையாளுகிறோம் என்பதே கனமகிமையைக் கொண்டு வருகிறது. பிரச்சனைகள் நமக்கு குணமாற்றத்தைக் கொண்டு வருகிறது. பொறுமையையும், நிரூபிக்கப்பட்ட நற்குணங்களையும் நமக்குள் உண்டாக்குகிறது. எனவேதான் உபத்திரவங்களின் மத்தியிலும் நம்மால் கிறிஸ்துவுக்குள் மேன்மைபாராட்ட முடிகிறது.

பிரச்சனைகள் வரும்போது நாம் செய்ய வேண்டியது இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர். நான் எந்தவகையில் மாற விரும்புகிறீர் என்பதை நாம் தேவனிடத்தில் வினவவேண்டும். அவர் நமக்கு போதித்து வழிநடத்துகிறவராக இருக்கிறார். அதன் விளைவாக நமது குணத்தில் நல்ல மாற்றமும், சூழ்நிலையில் மாற்றமும் உண்டாகி நான் நன்மை பெறுவதன் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/OAZugzhUQ7c

>