இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. (1 நாளாகமம் 28:19) தேவனால் தேவாலயத்தைக் கட்டவேண்டிய மாதிரியும் தனக்கு அருளப்பட்டது என்று தாவீது கூறுகிறார். தேவதிட்டத்தைப் புரிந்துகொண்டால்தான் நாம் அதை செயல்படுத்த முடியும்.
நம்முடைய தேவன் சிறப்பானது எதுவோ அதை நாம் அறிந்து, அதைத் தெரிந்துகொள்ளும்படி நமக்கு போதிக்கிறவராக இருக்கிறார். அத்தகைய பகுத்தறிவு நமக்கு அவசியத் தேவையாக இருக்கிறது. எனவேதான் சபைக்கு ஆவிக்குரிய புரிதலைத் தரும்படி அப்போஸ்தலனாகிய பவுல் ஜெபிக்கிறார். ஏனெனில் நாம் எதைப் புரிந்துகொள்ளுகிறோமோ அதன் மேல் நமக்கு வல்லமை இருக்கிறது. நமக்குப் புரியாத விஷயங்கள் நம்மீது வல்லமையை எடுத்துக்கொள்கிறது.
தேவன் நமக்காக ஒரு சிறந்த திட்டத்தை வடிவமைத்து வைத்திருக்கிறார். அந்தத் திட்டம் நமக்குப் புரியாது. எனவே அதை அவரே நமக்கு வெளிப்படுத்துகிறார். எப்படி வெளிப்படுத்துகிறாரெனில் ஆவியானவர் மூலமாக அதை அவர் நமக்கு விளங்கப் பண்ணுகிறார்.
தேவனுடைய திட்டத்தில் தெய்வீக அருள் இருக்கிறது. நாம அதைப் புரிந்துகொண்டு, அதை இருதயத்தில் விசுவாசித்து நாவினால் அறிக்கை செய்யும்போது அந்த ஆவிக்குரிய உண்மைநிலை நம் வாழ்வின் அனுபவமாக மாறுகிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/35t9CQmq4fo