தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – பாடுகளுக்கு பங்காளி… உங்களாலே மகிமைப்படுகிறார்

Home » தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – பாடுகளுக்கு பங்காளி… உங்களாலே மகிமைப்படுகிறார்

தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – பாடுகளுக்கு பங்காளி… உங்களாலே மகிமைப்படுகிறார்

நம்முடைய ஆத்துமாவுக்கு கலக்கம் வரும்பொழுது நாம் வாயைத் திறந்து என்ன சொல்லுகிறோம் என்பதே அது நம் ஆத்துமாவைத் தேற்றக்கூடியதா அல்லது மேலும் காயப்படுத்தக்கூடியதா என்பதைத் தீர்மானிக்கிறது. கர்த்தராகிய இயேசு தம்முடைய ஆத்துமா கலங்கின வேளையில் தம்மை பிதாவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்தே ஜெபித்தார்.

கர்த்தருடைய மகிமை என்பதை விளக்க வேண்டுமென்றால் அவர் தம்முடைய வல்லமையை செயல்படுத்தி, தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றி, தம்முடைய குணத்தை வெளிப்படுத்துகிறார், தாம் விரும்புகிற வண்ணம் அதைச் செய்வதே அவருடைய மகிமை ஆகும். பல நேரங்களில் அவர் அற்புதங்கள் செய்வதன் மூலம் தம்முடைய மகிமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமது பாடு மரணத்தின் மூலமாகவும் தம்முடைய மகிமையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அக்காலத்திய யூதர்களைப் போலவே நம்மாலும் உபத்திரவத்தில் மகிமை என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. ஆனால் தேவன் தம்முடைய வழியில்தான் தம்மை மகிமைப்படுத்துவாரே தவிர, நாம் நினைக்கும் வழிகளில் அல்ல.தேவன் வல்லவர் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. அவர் எப்படி செய்கிறாரோ அதுதான் சரி என்பதை விசுவாசிப்பதுதான் சரியான விசுவாசம் ஆகும்.

தேவன் சர்வ வல்லவர் மட்டுமல்ல, அவர் சர்வ ஞானியும்கூட எனவே அவர் எது செய்கிறாரோ அது சரியானதாகத்தான் இருக்கும். எனவேதான் ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும் கிறிஸ்து மகிமைப்படுகிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் முழங்குகிறார். நம் சூழ்நிலை எதுவாயினும் பிரச்சனைகளை ஜெயித்தவர் நமக்குள் வாழ்ந்திருக்கிறபடியினால் நம் பிரச்சனையின் மத்தியிலேயும், பிரச்சனையின் மூலமாகவும் அவர் மகிமைப்படுகிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/3GokiTwLeRU

>