அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார் என்று எபிரேயர் 2:16 கூறுகிறது. ஆம், அவர் சகலத்தையும் செய்து முடித்தவராக விசுவாசத்தில் ஆபிரகாமின் சந்ததியாராகிய நம்மை நோக்கி தமது உதவிக்கரத்தை நீட்டியிருக்கிறார். அவர் கொடுப்பதை பெற்றுக்கொள்வதன் மூலமாகத்தான் நாம் அவரைப் பற்றிக் கொண்டிருக்கிறவர்கள் என்பதும், அவரைச் சார்ந்திருக்கிறவர்கள் என்பதும் நிரூபணமாகிறது.
முதலாவதாக நமக்குக் கற்றுக்கொடுக்கும்படி அவர் நமக்கு உதவிக்கரம் நீட்டுபவராக இருக்கிறார். கற்றுக்கொண்டால்தான் நாம் ஜெயிக்க முடியும். எனவே நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியமாக இருக்கிறது. அவரிடத்தில் கற்றுக்கொள்ளும்பொழுதுதான் நாம் இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்கிறோம். எப்படிக் கற்றுக் கொடுத்தால் நாம் எளிதாகக் கற்றுக்கொள்வோமோ அப்படி நமக்குக் கற்றுக்கொடுகிறவராக இருக்கிறார்.
அடுத்ததாக, நமது ஜீவனத்துக்கும், தேவபக்திக்கும் தேவையான அனைத்தையும் அருளும்படி அவருடைய உதவிக்கரம் நமக்காக நீட்டப்பட்டு இருக்கிறது. அவை அனைத்தையும் அவர் நமக்கு வாக்குத்தத்தங்கள் மூலமாகத்தான் தருகிறார். கொடுக்கிற அவரை அறிந்துகொள்ளும்பொழுது நமக்கு பெற்றுக்கொள்ளுதல் எளிதாகிறது.
அஅவருடைய கிருபை நமக்கு உதவும்படியாக கரம் நீட்டுகிறது. அவரை அறியும் அறிவினால் உண்டாகும் நம்முடைய விசுவாசம் அவர் கொடுப்பதை, அவர் கொடுக்கும் காலம்வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள கரம் நீட்டுகிறது. அவர் கொடுப்பதும் நாம் பெற்றுக்கொள்வதும் நிகழும்பொழுது நமது ஆவிக்குரிய வாழ்வு செழிப்படைந்து நாளுக்கு நாள் வளார்ச்சியின் பாதையில் நடைபோடுகிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/qJaE3RmPhfc