இந்த உலகம் மனிதனை ஊக்கப்படுத்துவதற்கு அநேக போதகங்களைத் தந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் மனிதனுடைய சுயபெலனை அடிப்படையாகக் கொண்டவை. அதற்காக சுயபெலனை வைத்து வேலை செய்யக்கூடாது என்று அர்த்தமல்ல. நாம் செய்ய வேண்டியவைகளை நாம்தான் செய்ய வேண்டும். அதற்கு பெலன் கொடுக்கிறவர் கர்த்தர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
பணத்தையும் சுயபெலனையும் சார்ந்து கொண்டு உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ பணமும், பெலமும் இருப்பதால் ஆண்டவரை அண்டிக்கொள்ளாமல் இருப்பதைவிட, ஆண்டவர் இருப்பதால் பணத்தையும், பெலத்தையும் சார்ந்திராமல் இருக்கிறோம். ஏனெனில் அழிந்துபோகும் பணத்தையும், சுயபெலனையும் சார்ந்துகொள்ளுதல் எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது.
வேதம் சுயபுத்தியின்மேல் சாராதே என்று நமக்கு அறிவுறுத்துகிறது. அதன் பொருள் உனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணாதே, உனக்கு மிஞ்சின விஷயங்கள் ஏராளம் இருக்கிறது. அவைகளைப் பற்றிய அறிவை கர்த்தரிடத்தில் இருந்து மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். ஐசுவரியமும் கனமும் கர்த்தரால்தான் வரும், எனவே அவரைச் சார்ந்து கொள்ளும் கிருபையை நாம் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது அவர் தம்முடைய வார்த்தையை நம்முடைய உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணி, தம்மை சார்ந்துகொள்ள கிருபை செய்வார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/3obky-r08-0