உறவு: சகலவித சத்தியத்துக்குள்ளும்

Home » உறவு: சகலவித சத்தியத்துக்குள்ளும்

உறவு: சகலவித சத்தியத்துக்குள்ளும்

பரிசுத்தம் என்ற வார்த்தைக்கு எதிர்பதம் “பொதுவானது” என்பதாகும். பரிசுத்தவான்கள் எனப்படுபவர்கள் வேறுபிரிக்கப்பட்டவர்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவதன்மூலம் பொதுவான மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபிரிக்கிறார்.

சத்தியம் என்பது என்ன?

நமக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ, அல்லது உலகம் என்ன சொல்லிக்கொடுக்கிறதோ, அல்லது எது செயலாக்கத்துக்கு ஒத்து வருகிறதோ அது சத்தியம் அல்ல. சத்தியம் என்பது ஒரு நபர். அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. அவர்தான் “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்” என்றார். (யோவா 14:6) கர்த்தராகிய இயேசுவே சத்தியமாக இருப்பதால் ஆவியானவர் அவரிலிருந்து எடுத்து நமக்கு போதித்து, அந்த போதனையை அனுபவமாக மாற்றிக்கொடுப்பார்.

ஆக, சத்தியமும் குமாரனும் ஒன்றுதான். நீங்கள் குமாரனை அறிந்தால் சத்தியத்தை அறிந்தீர்கள், சத்தியத்தை அறிந்தால் குமாரனை அறிந்தீர்கள். சத்தியமாகிய குமாரன் விடுதலையாக்கினால் நாம் மெய்யாகவே விடுதலையாவோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் வேதனை உண்டாகும் வழிகள் என்னிடம் உண்டோ என்று என்னை சோதித்து, நித்திய வழியில் என்னை நடத்தும் என்று அவரிடம் கேட்க வேண்டியது மட்டுமே. நாம் மாறுவதற்கு நம்மை விட்டுக்கொடுத்தால் அவர் நம்மில் உன்னதமான மாற்றங்களைச் செய்ய வல்லவராக இருக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/pVz9LljCyyc

>