ஆசீர்வாதம் – எல்லாம் பார்த்துக்கொள்ளப்படும்

Home » ஆசீர்வாதம் – எல்லாம் பார்த்துக்கொள்ளப்படும்

ஆசீர்வாதம் – எல்லாம் பார்த்துக்கொள்ளப்படும்

மனிதன் படைக்கப்பட்டதற்கு ஒரு நோக்கம் உண்டு. கர்த்தரை அனுபவிப்பதன் மூலம், அவர் நல்லவர் என்பதை ருசித்து அறிந்து அவரை மகிமைப்படுத்துவதே அந்த நோக்கம் ஆகும். அவரை எப்படி அனுபவிக்க முடியும். அவரை அறிந்துகொண்டால்தான் அனுபவிக்க முடியும்.

நாம் கர்த்தரை அறியவேண்டிய பிரகாரமாக அறிந்துகொள்வதற்காக அவரே நமக்கு ஞானத்தையும் தெளிவையும் அளிக்கும் ஆவியை அருளியிருக்கிறார். அவரை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் அவரை அனுபவித்து ருசிக்கவும் தம்மையே அவர் சிலுவையில் நமக்காகத் தந்திருக்கிறார். சத்தியத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார், ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறார், தேவையான நேரத்தில் நினைப்பூட்டவும் செய்கிறார்.

ஆகவே நம்பிக்கையோடும், மனத்தாழ்மையோடும் நாம் அவரை அணுக வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர் நம்மை நோக்கிப் பார்க்கிறார், நமக்குத் தேவையானவைகளை பார்த்துக்கொள்கிறார் ஆகையால் அவர் பார்த்துக்கொண்டார் என்பதை நம்மையும் பார்க்க வைப்பார். ஆபிரகாம் கிறிஸ்துவின் நாளைக் கண்டு களிகூர்ந்ததுபோல அவர் நம்மையும் பார்க்க வைப்பார். அல்லேலூயா!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/ytcD1kzLTd4

>