தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை..முன் நோக்கி

Home » தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை..முன் நோக்கி

தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை..முன் நோக்கி

கர்த்தருடைய தாசனாகிய மோசே எகிப்து என்னும் மோசே வல்லரசு நாட்டின் பொக்கிஷத்தைப் பார்க்கிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று தெரிந்துகொண்டான். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தீர்மானம் இது. இப்படித்தான் நம்முடைய காலங்களை தெய்வீகக் கண்ணோட்டத்தோடு காண பழகிக்கொள்ள வேண்டும்.

நம் அனைவருக்கும் வலிகளுடன் கூடிய ஒரு கடந்த காலம் இருக்கும் என்பதை மறுக்க இயலாது. ஆனால் அந்த கடந்த காலத்தை கர்த்தருடைய இரக்கத்துக்கு, அவருடைய கையில் விட்டுவிடவேண்டும். அப்பொழுது துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு ஈடாக கர்த்தர் நல்ல நாட்களைக் கொடுப்பார். நாமோ முன்னோக்கிப் பார்க்க வேண்டும்.

தேவனுடைய வார்த்தையின் அடிப்படடையில் எண்ணிப்பார்த்தால்தான் உலகத்தின் பொக்கிஷத்தைவிட தேவனால் வரும் நிந்தை உத்தமம் என்பது புரியும். ஆபிரகாம் தேவன் மரித்தோரிடத்திலிருந்து உயிர்ப்பிக்க வல்லவர் என்ற விசுவாசத்தில்தான் ஈசாக்கை பலியாகக் கொடுக்கத் துணிந்தார். ஏனெனில் ஈசாக்கின் மூலம் உன் சந்ததி விளங்கும் என்ற வாக்கை அவர் முன்னரே பெற்றிருந்தார்.

கர்த்தராகிய இயேசுவும் தமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற சந்தோஷத்தின் பொருட்டு சிலுவையை சகித்தார். அழிந்து போகிற நன்மைகளைப் பார்க்கிலும், அவர் கொடுக்கக்கூடிய அழியாத நன்மை மேலானதாக இருக்கிறபடியாலும், அவர் பார்த்துக்கொள்வார் என்பதை அவர் நம்மைப் பார்க்க வைத்தபடியினாலும் பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி நாம் எதிர்நோக்கிப் போகலாம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/jbt3GUrxFKc

>