கர்த்தராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் அவருடைய சீஷர்கள் அனைவரும் குறைவுள்ளவர்களாகவே இருந்தார்கள். ஆனாலும் கர்த்தராகிய இயேசு அவர்கள்மீது பொறுமையாக இருந்து அவர்களது குறைகளை சகித்து அவர்களை பிரயோஜனமான பாத்திரங்களாக உருவாக்கிய வரலாற்றை நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
அன்பானது ஒரு நபருக்குள் ஆயிரம் குறைகளிருந்தாலும் அவர்களிலுள்ள ஒரு நல்ல காரியத்தைக் கண்டுபிடித்து அதை நம்புகிறது. அவர்களைத் தாங்கி, அவர்களிடத்தில் பொறுமையாக இருந்து அவர்களிலுள்ள அந்த ஆயிரம் குறைகளையும் சரிசெய்து அவர்களை சீர்படுத்துகிறது.
ரோமர் 5:5 சொல்லுகிறபடி நம்முடைய இருதயத்தில் ஊற்றப்பட்டிருப்பது தேவனுடைய அன்பாகும். அது தேவன் செயல்படுகிறது போலவே தானும் செயல்படுகிறது. ஊற்றப்பட்ட அந்த அன்பானது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை தாங்கும், சகிக்கும், விசுவாசிக்கும். அந்த அன்பே நமக்குள் தைரியத்தையும், தேவன்மீது விசுவாசத்தையும் கொண்டுவருகிறது. அந்த அன்பு மட்டும் இல்லாவிட்டால் நாம் தேவையற்ற பயங்களுக்கும், கவலைகளுக்கும் கதவைத் திறந்துவிட்டுவிடுவோம்.
அன்பு எல்லா விஷயத்தையும் நம்பக்கூடியதாக இருந்தாலும், அது நீதிசெய்யக்கூடியதாக இருக்கிறபடியால் அது ஏமாளி அல்ல. அது மனிதனை அல்ல தேவனை நம்புகிறது. தேவன் எந்த மனுஷனயும் பிரகாசிப்பிக்கக்கூடிய ஒளியாக இருக்கிறபடியால் அவரால் ஒரு மனிதனுக்குள் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்பி விசுவாசத்தோடு பொறுமை காக்கிறது. ஆம், தேவ அன்பானது மன்னிக்கக்கூடிய, மறுவாழ்வு தரக்கூடிய அன்பாகும்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/iVyDr32RnTs