உறவு: இரக்கம்

Home » உறவு: இரக்கம்

உறவு: இரக்கம்

கர்த்தருடைய தாசனாகிய தானியேல் ஒருமுறை கர்த்தரிடம் ஜெபிக்கும்போது நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம் என்று ஜெபிக்கிறார். (தானியேல் 9:18) நாம் எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாக மாறினோம் என்று வேதம் சொல்லுகிறது.

அப்படியிருக்கையில் கர்த்தர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராகி அக்கிரமத்திலும் பாவத்திலும் மரித்த நம்மை உயிர்ப்பித்து, பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து, இரட்சித்தார். அவருடைய இரக்கம் கிறிஸ்துவை நமக்காக இறங்கிவரப்பண்ணினது. நமக்கு என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்து அவரோடு கூட நம்மை உயிர்ப்பித்து, உன்னதங்களில் அவரோடேகூட நம்மை உட்காரவும் செய்தது. பாவத்தில் மரித்து பிணமாயிருந்த நாம் இப்போது பிள்ளைகளாய் இருக்கிறோம்.

நம்முடைய பிரச்சனைகளுக்குக் காரணம் நாம் எப்போதும் நம்மையே முன்நிறுத்தி சிந்திப்பதுதான். கர்த்தரை மாத்திரம் முன்வைத்து, அவருடைய கிருபைகளை சிந்தித்துக்கொண்டிருப்பது நலம். கிருபையையும், இரக்கத்தையும் புரிந்துக்கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்துகொண்டு அதை அனுபவிக்க வேண்டியவிதமாக அனுபவித்தால் அங்கே பெருமைக்கு இடமே இருக்காது. தாம் இயல்பாகவே தாழ்மையைத் தரித்துக்கொள்ளுகிறவர்களாகக் காணப்படுவோம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/PAhb5YOLU20

>