வடிவமைக்கிறார்: முன் செல்பவர்

Home » வடிவமைக்கிறார்: முன் செல்பவர்

வடிவமைக்கிறார்: முன் செல்பவர்

நமக்கு வாக்குத்தத்தங்கள் தந்த கர்த்தரே அதை நிறைவேற்ற வல்லவராகவும் இருக்கிறார். அதை அவர் மாத்திரமே நிறைவேற்ற முடியும். ஆனாலும் அது நிறைவேற காலதாமதம் ஆகக் காரணம் அவர் நம்மை உருவாக்க விரும்புகிறார் என்பதே.

அவர் முந்தினவரும், பிந்தினவரும், இருக்கிறவருமாக இருக்கிறபடியால் சகலத்தையும் அறிந்திருக்கிறார். எனவே அவரை நம்பியிருக்கிற நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் மாறாதவர் மட்டுமல்ல, தாம் கொடுத்த வாக்குத்தத்தங்களையும் எக்காரணம் கொண்டும் மாற்றாதவர். அவர் கொடுத்தது கொடுத்ததே! அவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமேன் என்றும் இருக்கிறபடியால் அவை ஏற்ற காலத்தில் நிறைவேறியே தீரும்.

அவர் சகலத்தையும் முன்னறிந்த தேவனாக இருக்கிறபடியால் அவர் முன்னறிவிக்கிறவராகவும் இருக்கிறார். அவரே அறிவித்து, அவரே இரட்சித்து, அவரே விளங்கவும் பண்ணுகிறார். அவரைப்போல கிரியை செய்யத்தக்கவர் வேறு யாரும் இல்லை. அதற்கு அவர் நம்மையே சாட்சிகளாக நிறுவுகிறார்.

ஆகவே நம்மிடம் இல்லாதவைகளைக் குறித்து கவலைப்படாமல் கிதியோனைப்போல இருக்கிற பெலத்தோடே போவோம். அவர் நம்மோடு கூடவே இருந்து, நாம் வலப்பக்கம் இடப்பக்கம் சாயும்போது நம் காதுகள் கேட்க பேசி நம்மை சரியான பாதையில் நடத்துவார். நமக்கு சொன்னதையெல்லாம் ஒன்று விடாமல் நிறைவேற்றுவார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/KD33fZBmAMI

>