மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம் ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும் என்று நீதிமொழிகள் 19:21 கூறுகிறது. அந்த யோசனையை நிறைவேற்றுவதற்காகத்தான் நமக்கு வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற கர்த்த திட்டம் வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை நமக்கு அறிவிக்க அவர் நாம் அவரிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறார்.
சிலவேளைகளில் நமக்கு மிகவும் நெருங்கியவர்கள்கூட நம்மைப் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் நம்முடைய பிதா நம்மைப் புரிந்துகொள்ளாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் நம்மை அறிந்திருக்கிறார். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதையும் அவர் அறிந்திருக்கிறார். நமக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்திருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நோக்கிக் கூப்பிடுவது மட்டுமே!
அவர் நம்மை நடத்தும் பாதையில் ஒருவேளை தாமதங்களும், வழிமாறிப்போகக்கூடிய சூழல்களும், முட்டுக்கட்டைகளும் வரலாம். ஆனாலும் நாம் போய் சேரவேண்டிய இடத்துக்குப் போய் சேருவது உறுதி. அவர் நம்மைக்குறித்த தமது நல்வார்த்தைகளை நிச்சயம் நிறைவேறப்பண்ணுவார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/0aOTlAWNpDQ