அஸ்திபாரம்: உறவு, பரஸ்பரம்

Home » அஸ்திபாரம்: உறவு, பரஸ்பரம்

அஸ்திபாரம்: உறவு, பரஸ்பரம்

நாம் எதற்கு கவனம் கொடுக்கிறோமோ அதுகுறித்து உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். ஆவிக்குரிய காரியங்களில் கவனச்சிதறல் இருக்குமானால், நாம் இருமனம் உள்ளவர்களாகக் காணப்படுவோம். இருமனம் உள்ளவர்களால் தேவனுடைய குரலைக் கேட்க முடியாது. நாம் மனதால் தேவனிடத்தில் நெருங்கிச் சேருவதும், அவரோடு ஐக்கியமாய் இருப்பதும் அவசியம்.

அதேபோல நாம் இருதயக்கடினம் உள்ளவர்களாகவும் இருக்கக்கூடாது. தேவனுடைய சத்தத்தை அலட்சியப்படுத்துவதும், தேவனிடத்தில் பேரம்பேசி காரியங்களைத் தள்ளிப்போடுவதுமே இருதயக் கடினத்துக்கு காரணமாக இருக்கிறது. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சங்கீதம் 95:8 நமக்கு அறிவுறுத்துகிறது.

இருமனமும், இருதயக்கடினமும் இல்லாத உணர்வுள்ள ஜனங்களாக நாம் இருப்பது நமது சுயமுயற்சிகளால் சாத்தியமில்லை. நிச்சயமாக நமக்கு அதற்கு பரிசுத்த ஆவியானவரின் உதவியும், வழிநடத்துதலும், அவர் அருளும் பெலனும் அவசியம். அவரின்றி எதையும் சாத்தியப்படுத்த நம்மால் இயலாது. தேவனுடைய குரலுக்கு உணர்வுள்ள, கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாக நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர தேவனே நமக்கு அருள்புரிவாராக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/AQjYSRFbW7c

>