நம்முடைய விசுவாசத்தை விலையேறப்பெற்ற விசுவாசம் என்று வேதம் விளிக்கிறது. அது ஏன் விலையேறப்பெற்ற விசுவாசமென்றால் அது கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது நம்மால் உண்டானதல்ல, அவரால் உண்டான விசுவாசம். நம்முடைய விசுவாசம் கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்தெழுதலுடன் இணைக்கப்பட்டிராவிட்டால் அது விருதாவாக இருக்கும்.
நம்முடைய விசுவாசம் தேவன்மீது, அதாவது தேவனுடைய வார்த்தையின்மீது வைக்கிற கவனமாக இருக்கிறது. தேவன்மீது கவனம் குவிகின்றபோது நம்மை பாரமாக அழுத்துகிற யாவற்றையும், நம்மை நெருங்கி நிற்கிற பாவத்தையும் உதறிவிட்டு அவரையே நோக்கி ஓட முடியும். ஏனெனில் நமது விசுவாசத்தை துவக்குகிறவரும், பூரணப்படுத்துகிறவரும் அவரே!
விசுவாசம் என்பது தேவன்மீது விசுவாசம் வைப்பது மட்டுமல்ல, தேவனுக்கு விசுவாசமாக இருப்பதும் ஆகும். நாம் பெலவீனமுள்ளவர்களாக இருந்தாலும் அவர் நிறைவுள்ளவராக இருக்கிறபடியால் தமது நிறைவைக் கொண்டு நமது குறைவுகளை அவர் நீக்குகிறார். அவருடைய உண்மை நம்மையும் உண்மையுள்ளவர்களாக மாற்றுகிறது. அவருடைய நிறைவு நம்மை குறைவின்றி நடத்துகிறது.
ஆகவே நமது பெலவீனங்களையும் மீறி நம்மால் விசுவாச வீரர்களாக உருவாக முடியும். நம்முடைய சொந்த முயற்சிகளால் அல்ல, தேவனை நோக்கிப்பார்ப்பதால் நாமும் அவரைப்போலவே மாறுகிறோம். அல்லேலூயா!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/sU-PC3F1p5M