பரிசுத்தஆவியானவர் மூலமாக தேவஅன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது. இந்த அநியாயத்தில் சந்தோஷப்படாமல் அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படக்கூடியதாக இருக்கிறது. ஆக, பரிசுத்த ஆவியானவருக்கும், சத்தியத்துக்கும், அன்புக்குமிடையில் ஒரு பிணைப்பு இருக்கிறது.
அவருடைய பேரே சத்திய ஆவியானவர் என்று யோவான் 14:16 சொல்லுகிறது. அவர் நமக்கு சத்தியத்தை விளக்கிச் சொல்வதால்தான் நமக்கு சத்தியத்தின் மேலேயே ஒரு சந்தோஷம் வருகிறது. அதன் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகியிருக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நமக்கு சத்தியத்தை புரிந்துகொள்ள உதவி செய்வது மட்டுமன்றி அந்த சத்தியத்துக்கு கீழ்ப்படியும் பெலனையும் தருகிறார். நாம் பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டிருப்பதே நாம் கேட்டது சரியான சுவிவேஷம்தான், கீழ்ப்படிந்த விதமும் சரிதான் என்பதற்கு உத்திரவாதமாக இருக்கிறது. சத்தியத்தை அறிவதும் அதற்குக் கீழ்ப்படிவதும்தான் மெய்யான சந்தோஷமாக இருக்கிறது, அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதமாகவும் இருக்கிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/YyqM148WWiE