நற்கிரியை என்ற வார்த்தை பலரால் பலவிதமாக புரிந்துகொள்ளப் படுகிறது. ஆனால் வேதத்தின்படி நற்கிரியை என்பது வெளிப்படுத்தப் பட்ட தேவசித்தத்துக்கு உட்பட்டதாகவும், தேவ மகிமையையே இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் இருக்கிறது.
அப்படிப்பட்ட நற்கிரியையை நாம் தேவன்மீது இருக்கும் அன்பின்பால் செய்யும்போது அதிநிமித்தம் பாடுகளும், நிந்தைகளும், சோர்வுகளும் வருவது தவிர்க்கமுடியாததாகிறது. இந்தச் சூழ்நிலையில் நாம் உறுதியாக நிற்கவேண்டும். தேவன் நமக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார், அவர் நம் பட்சத்தில் இருக்கிறார் என்கிற உணர்வு வேண்டும். இந்த சோதனைகள் நம்மை உருவாக்குவதற்கேயன்றி உடைப்பதற்க்கல்ல. இதநிமித்தம் பரலோகத்தில் நம் பலம் மிகுதியாக இருக்கும்.
நம்முடைய கஷ்டங்களின் மத்தியில் நமது இருதயத்தை கர்த்தருடைய சமுகத்தில் ஊற்றிவிட வேண்டும். அவர் நமது ஜெபங்களைப் புரிந்துகொள்வார். அவரே நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். என் ஆத்துமா கர்த்தரையே நோக்கி அவர்ந்திருக்கிறது. நான் நம்புகிறது அவராலே வரும் என்ற நிலைக்கு வரும்வரை அவர் நம்மை உருவாக்குகிறார்.
நற்கிரியைகளின் நிமித்தம் நமக்குப் பாடுகள் வந்தால் அந்தப் பிரச்சனையில் தேவன் அற்புதமான கிரியை நமக்குள் நடப்பித்து, நம்மை பாக்கியவான்களாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், மிகுந்த பலனைப் பெறக்கூடியவர்களாகவும் நிறுத்த வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/2YsNQW2vxeU